சரும பராமரிப்பு என்பது, இக்காலத்தில், பெண்களுக்கு நிகராக, ஆண்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. முகம் பொலிவாக, பளிச்சென்று இருப்பது,உடலில் இருக்கும் ஏனைய சருமங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவது என்பது,அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது. சரும பராமரிப்புக்காக சன் ஸ்கிரீன்கள்,புரோட்டின் நிறைந்த கிரீம்கள் மற்றும் லோஷன்களை பயன்படுத்துகிறார்கள்.


ரசாயன பொருட்களை பயன்படுத்துவதை விட, வீட்டிலேயே,இயற்கையான முறையில் தயாரிக்கப்படும்,பாசிப்பயிறு, கடலைப் பயறு,சாதம் வடித்த தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்துவது,ரசாயன கலப்பில்லாமல்,நமது சருமத்திற்கு எவ்வித பக்க விளைவு ஏற்படுத்தாமல், அழகை தரக்கூடியதாகும். அந்த வகையில் புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் வைட்டமின்கள் பி மற்றும் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கும்,சாரப்பருப்பைக் கொண்டு,சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளை,எவ்வாறு சரி செய்வது என்பதை காண்போம்.


முகத்தில் பருக்கள்:


டீன் ஏஜ் பருவத்தினர் சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சனை இந்த முகப்பருவாகும்.அதிலிருந்து விடுபட, சாரப்பருப்பை சிறிதளவு அரைத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்துக் உள்ளுக்குள் அருந்தவும். மேலும் சிறிய அளவு பேஸ்ட்டை, உங்கள் முகத்தில் தடவி, பதினைந்து நிமிடங்கள் விட்டு,சுத்தமான தண்ணீரில் கழுவவும்.


சருமம் பளபளப்பாக:


சுத்தமான சந்தனத்தை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, குழைத்து கொள்ளவும்,அதில் இரண்டு டீஸ்பூன் சாரப்பருப்பை விழுது போல அரைத்து எடுத்து, கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து,சுமார் அரை மணி நேரங்கள் கழித்து,நன்றாக குளிக்கவும்.இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்து வர,உங்கள் சருமமானது பளபளப்புடன் காணப்படும்.


வறண்ட சருமத்தைப் போக்க:


தோல் மிகவும் வறண்டிருந்தால், சாரப்பருப்பையும்,தேனையும், இணைத்து பயன்படுத்தவும் . சாரப்பருப்பை அரைத்து, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் இரண்டு ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.பின்னர், இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் இருபது நிமிடங்கள் ஊற விட்டு, தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம்,உங்கள் சருமம் நீரேற்றமாக இருக்கும்.


சிறு கரும்புள்ளிகளையும், தழும்புகளையும் போக்க:


சாரப்பருப்பை பாலில் அரை மணி நேரங்கள் ஊறவைத்து,நன்றாக விழுது போல் அரைத்து கொள்ளவும். அதில் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்து குழைத்து எடுத்துக் கொள்ளவும்.முகத்தில் எங்கெல்லாம் தழும்புகள் மற்றும் கரைகள் இருக்கிறதோ,அங்கெல்லாம் இந்த கலவையை போடவும்.அரை மணி நேரங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும்.இவ்வாறு செய்து வர,சிறு கரைகள் மற்றும் தழும்புகள் மெல்ல மறைய ஆரம்பிக்கும்.
 சாரப்பருப்பு இயற்கையிலேயே உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு உணவு பொருளாகும்.இதை சருமத்தில் மேற்புறம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ.அதே போல உணவாகவும்,அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.இந்த சாரப்பருப்பை அரைத்து விழுது போல் எடுத்துக்கொண்டு,இரவு படுக்கு முன் பாலில் கலந்து குடிக்கலாம். தற்காலத்தில் சாரப்பருப்பில் செய்யப்பட்ட பேஸ் பேக்குகள் கிரீம்கள் மற்றும் சன் ஸ்கிரீன்கள் என நிறைய கிடைக்கின்றன. அவசர தேவைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின் பெயரில். இத்தகைய பொருட்களையும் பயன்படுத்தலாம். ஆனாலும் சாரபருப்பை நேரடியாக மேற்கண்ட வழிகளில் உபயோகிப்பது நிறைந்த பலன்களை தரும்.மேலும் வாரத்திற்கு இரு முறை, குறிப்பிட்ட அளவு சாரப்பருப்பை, ஏதேனும் ஒரு வழிகளில் உட்கொள்வது, சருமத்திற்கு இன்னும் அதிக நன்மைகளைத் தரும்.