Aloe Vera Juice: பொதுவாக மக்கள் தங்கள் வீட்டை அழகுப்படுத்த கற்றாழை செடிகளை வாங்குகிறார்கள். கற்றாழை செடிகள் சுத்தமான காற்றை சுவாசிக்க உதவுகிறது. இதை குடிக்கலாமா என்பது குறித்து பல பெருக்கு தெரியாமல் இருந்து வருகிறது. இதை குடிப்பதனால் நம் உடலில் நல்ல ஆரோக்கியத்துடன் மேம்படுத்துகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த கற்றாழைகள் ஊட்டச்சத்துக்களால் உட்செலுத்தப்பட்டுள்ளன, இது உங்கள் உடல் நோய்களை மிகவும் திறம்பட எதிர்த்துப் போராட உதவுகிறது.


கற்றாழை நன்மைகள் 
அடிக்கடி நோயினால் பாதிக்கப்படுவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த கற்றாழை ஜூஸை குடித்தால் நல்ல பலனை பெறலாம். மேலும் இதனால் உயர் ரத்த அழுத்தம் குறையும் மற்றம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். கற்றாழை ஜூஸில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி2 ஆகியவை நிறைந்துள்ளன. முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பயன் உள்ளதாக இருக்கும். கூடுதலாக இது மூட்டுகளில் வலி மற்றும் விறைப்புத்தன்மையைக் குறைக்கிறது. கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலில் சிதைக்காலம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பம் ஆகும்.


குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது
நச்சு நீக்கும் பொருட்கள் கொண்ட கற்றாழை ஜூஸ் குடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. சில மலமிளக்கிகள் கொண்ட இவை மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. மேலும் சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகளால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை போக்கும் திறனை காற்றாலை ஜூஸ் கொண்டுள்ளது.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்


நாள்தோறும் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவில் கற்றாழை சாற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. உடலை தீங்கு விளைவிக்கும் கிருமிகளிலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் நோய்களுக்கு நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த இது உதவும். மேலும் தினமும் சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.


தோல் பிரச்னைக்கு உதவும்
நாம் அனைவரும் அடிக்கடி சொறி, ஒவ்வாமை, முகப்பரு மற்றும் சிவத்தல் போன்றவற்றால் பாதிக்கப்படுவது வழக்கம். இந்த கற்றாழை ஜூஸை தினந்தோறும் தவறாமல் உட்கொள்வது சரும பிரச்னையில் இருந்து விடுபட உதவும். காற்றாழை சாறுகள் தோளில் ஏற்படும் புண்கள் மற்றும் சிரங்குகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன. கற்றாழை சாற்றை மோரில் கலந்து குடித்து வந்தால், உடல் சூட்டினால்  முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.


மாதவிடாய் காலத்தில் நல்லது
ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு கற்றாழை சாறு குடிப்பது மிகவும் நல்லது. இது வயிற்று வலியைக் குறைக்கிறது மற்றும் அந்த வலிமிகுந்த பிடிப்புகளை உடனடியாக குணப்படுத்துகிறது. மாதவிடாய் சுழற்சியின் போது அடிக்கடி குமட்டலுக்கு ஆளாகும் பெண்களுக்கும் கற்றாழை சாறு நன்மையை உண்டாக்கும்.