கோடை நெருங்கிவிட்ட சூழலில் தாகமும், வறட்சியும் நம்மை வாட்டத் தொடங்கிவிட்டது. தாகம் போக்க தண்ணீரை எவ்வளவுதான் குடிப்பது என்ற சலிப்பும் வராமல் இல்லை. பழ ஜூஸ்கள் குடித்தாலும் கூட சீக்கிரமே தாகம் வந்துவிடுகிறது எனக் கூறுபவர்களுக்கு இதோ எளிதில் செய்யக்கூடிய 5 ரெஸிபிக்கள்.

1. வெள்ளரி புதினா மொஜிட்டோ

தேவையான பொருட்கள்:

வெள்ளரி பாதி துருவியதுஃப்ரெஷ்ஷான புதினா இலை 1/4 கப்2 டேபிள் ஸ்பூன் லைம் ஜூஸ்2 டேபிள் ஸ்பூன் சுகர் சிரப்சோடாஐஸ் க்யூப்ஸ்

செய்முறை: 1. ஒரு காக்டெய்ல் ஷேக்கர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளரி துண்டுகளையும் புதினா இலைகளையும் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

2. அதில் லைம் ஜூஸ், சுகர் சிரப், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து நன்றாக குலுக்கவும். 

3. இப்போது ஐஸ் க்யூப் நிரப்பிய கண்ணாடி டம்ப்ளரில் இதை ஊற்றவும்.  

4. அதன் மீது சோடா ஊற்றவும். பின்னர் புதினா இலைகளைப் போடவும். கொஞ்சம் வெள்ளரி துண்டுகளைப் போடவும்.  

2. குக்கும்பர் மின்ட் லெமனேட்:

தேவையான பொருட்கள்:

ஒரு பெரிய வெள்ளரி எடுத்துக் கொள்ளுங்கள்1 கப் ஃப்ரெஷ்ஷான புதினா இலைகளை1 கப் லெமன் ஜூஸ்1 கப் சுகர்6 கப் சர்க்கரைஐஸ் க்யூப்ஸ்

 செய்முறை:

1. வெள்ளரியை தோல் சீவிவிட்டு அதை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

2. வெள்ளரி துண்டுகள், புதினா இலைகள், லெமன் ஜூஸ், சர்க்கரை, 2 கப் தண்ணீர் ஆகியனவற்றை ஒரு ப்ளெண்டரில் சேர்த்து அரைத்து கொள்ளவும். நன்றாக மை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

3. இதை நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

4. ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து. புதினா இலைகள் போட்டு பரிமாறலாம்.

3. குக்கும்பர் மின்ட் ஜிஞ்சர் அலே:

தேவையான பொருட்கள்:

1 கப் வெள்ளரிஅரை கப் புதினா இலைகள்அரை கப் இஞ்சிஅரை கப் லைம்2 கப் ஸ்ப்ரிங்கிளிங் வாட்டர்ஐஸ் க்யூப்ஸ்

செய்முறை:

1. வெள்ளரியை தோல் சீவிவிட்டு அதை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

2.  வெள்ளரியையும், புதினாவையும் ப்ளெண்டரில் சேர்த்து அரைத்து கொள்ளவும். நன்றாக மை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

3. இதனை வடிகட்டிக் கொள்ளவும்

4. இந்தக் கலவையில் துருவிய இஞ்சி மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்துக் கொள்ளவும்

5. க்ளாஸில் ஐஸ் க்யூப் சேர்த்து பரிமாறவும்.

இந்த மூன்று பானங்களும் செய்வது எளிது. அதே வேளையில் மிகவும் புத்துணர்ச்சி தரக்கூடியது.