திராட்சை என்றால் நம் நினைவுக்கு வருவது அதன் புளிப்பு மிகுந்த சுவை தான். பல வகை திராட்சைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. பச்சை திராட்சை, கருப்பு திராட்சை, பன்னீர் திராட்சை, சீட்லெஸ் திராட்சை, சிவப்பு திராட்சை என வகைகள் ஏராளம். திராட்சையில் புளிப்பு சுவை இருப்பதால் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போல இதுவும் சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்தது தான். ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொரு வகை திராட்சை விற்பனைக்கு வரும். திராட்சையில் என்னற்ற நன்மைகள் உள்ளது. சத்துக்கள் என பார்க்கப்போனாலும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.
திராட்சையில் வைட்டமின் பி12, சிங்க், காப்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. திராட்சையில் இருக்கும் மருத்துவ குணங்கள் என எடுத்துக்கொண்டால் ஏராளம். குறிப்பாக நம் தமிழ்நாட்டில் அதிகம் கிடைக்கும் பன்னீர் திராட்சை அதிக அளவு நன்மை பயக்கும்.
பன்னீர் திராட்சையில் டேரோஸ்டில்பேன் என்ற உட்பொருள் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புக்களை குறைத்து, கொழுப்பின் அளவை சீராக வைக்கும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேபோல் ஈறுகள், தசைகளை வலுப்படுத்தும். திராட்சை சாப்பிடுவதால் நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து வறட்டு இருமல் வராமல் தடுக்கும் என கூறப்படுகிறது.
திராட்சையில் இயல்பாகவே நீர்சத்து நிறைந்து உள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் குடித்தும் தாகம் அடங்காதது போல் இருக்கும். அதற்கு சிறுதளவு திராட்சை பழங்களை சாப்பிட்டால் உடலில் நீர் சத்து அதிகரிக்கும். தாகமும் அடங்கும். அதேபோல் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் திராட்சையில் அதிகம் காணப்படுகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படாது.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு அதிகமாக மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது. அன்று முதல் இன்று வரை அனைவருக்குமான தீர்வாக இருப்பது இந்த திராட்சை தான். உலர் கருப்பு திராட்சையை தண்ணீரில் நன்கு ஊர வைத்து, அதனை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்ற பிரச்சனையே இருக்காது. பலருக்கும் திராட்சை சாப்பிட்டால் காய்ச்சல் அல்லது சளி வந்துவிடும் என நினைப்பது உண்டு. ஆனால் திராட்சை சாறை சுடு தண்ணீரில் கலந்து குடித்தால் காய்ச்சல் நாவறட்சி சரியாகும். பன்னீர் திராட்சையில் உள்ள லிமோனேன் என்ற சத்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதால், இதை கட்டாயம் தினசரி எடுத்துக் கொள்ளலாம்.
பன்னீர் திராட்சை புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். சாப்பிடும் போது இடையில் கொட்டைகள் வாயில் தென்படுவதால் பலரும் இந்த வகை திராட்சையை விட்டு சீட்லெஸ் திராட்சை, ஆஸ்திரேலியன் திராட்சை போன்ற திராட்சைகளை விரும்புகின்றனர். ஆனால் மற்ற திராட்சை வகைகளை விட பன்னீர் திராட்சையில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். விலையை ஒப்பிடும் போது பன்னீர் திராட்சை மிகவும் குறைவு.