ஒரு நாளை காலையில் 5 அல்லது 6 கறிவேப்பிலையுடன் தொடங்கிப் பாருங்கள். அதன் நன்மை என்னவென்று உங்களுக்கு அனுபவ ரீதியாகப் புரியும்.


முதலில் கறிவேப்பிலையின் நன்மைகளை அறிந்து கொள்வோம்.


கறிவேப்பிலை இந்திய உணவுகளில் அடிக்கடி பயன்படுத்துகின்றது. கறிவேப்பிலை தாளிப்பில் பயன்படுத்தும்போது அதன் வாசனையுடன் எண்ணெயை உட்செலுத்துவதன் மூலம் உணவுகளின் சுவையை அதிகரிக்கிறது. மசாலாப் பொருளாக அடிக்கடிப் பயன்படுத்தப்படும் இந்த இலை, ஒவ்வொரு உணவுக்கும் ஒரு தனிச் சுவையைத் தருகிறது, கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், உங்கள் இதயம் சிறப்பாக செயல்படவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. கறிவேப்பிலை அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கும் பல செரிமான விளைவுகளையும் கொண்டுள்ளது.


1. முடி வளர்ச்சியை அதிகரிக்கும்
கறிவேப்பிலையில் ஆண்டிஆக்ஸிடன்களும் புரதச்சத்தும் அதிகம் இருக்கிறது. இவை ஃப்ரீ ராடிகல்ஸை எதிர்த்துப் போராடி முடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளரச்செய்கிறது. கருவேப்பிலையில் உள்ள விட்டமின் பி முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இளநரையை தவிர்க்கிறது.  


2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கறிவேப்பிலையில் அதிகளவில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்கள் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயிலிருந்து நம்மை காக்கிறது. இவை ஃப்ரீ ராடிகல்ஸை எதிர்த்துப் போராடி உடம்பின் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரிஸை குறைக்கிறது.


3. கண் பார்வையை மேம்படுத்தும்
விட்டமின் ஏ வை அதிகளவில் கொண்ட இக்கருவேப்பிலைகள் கண் பார்வையை மேம்படுத்த உதவும். Kadi patta can also help age-related degeneration.


4. மசக்கை மற்றும் குமட்டலில் இருந்து விடுதலை அளிக்கும்
வாய்வு நீக்கும் தன்மை கொண்ட கருவேப்பிலை, மசக்கையால் வயிற்று வீக்கம், குமட்டல் ஆகியவற்றை குணப்படுத்தும்
சிறிதளவு கருவேப்பிலையை மெல்லுதல் ஜீரணசக்தியை மேம்படுத்த உதவும்.


5. உடல் எடை குறைப்பதற்கு உதவும்
ஆய்வுகளின்படி, கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஒபெசிட்டி மற்றும் லிப்பிட்-குறைக்கும் விளைவுகள், உடல் பருமனை குறைக்க உதவுவதோடு, கொலஸ்ட்ரால் அளவையும் மேம்படுத்தும்.


சிறிதே அளவிலான கறிவேப்பிலைகள் உங்கள் உணவில் பல சுவைகளை சேர்க்கலாம்.  ஒவ்வொரு சமையலறையிலும் ஒரு கறிவேப்பிலை செடி இருக்கும். இது பெரும்பாலும் தென்னிந்திய உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. கறிவேப்பிலை எளிதில் கிடைப்பதால் வீட்டிலும் பயிரிடலாம். வலுவான சுவையைத் தருவதை தவிர, கறிவேப்பிலை உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது. தலைமுடிக்கு கறிவேப்பிலையின் நன்மைகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் அதையும் தவிர கறிவேப்பிலை உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கும்.  ஒரு சில கறிவேப்பிலையுடன் உங்கள் நாளைத் தொடங்குவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல அதிசயங்களைச் செய்யும்.


வெறும் வயிற்றில் 5-6 கறிவேப்பிலையை ஒரு குவளை தண்ணீருடன் மென்று சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க நீங்கள் செய்யக்கூடிய எளிய விஷயங்களில் ஒன்றாகும்.