'நாம் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்கிறோம். இப்படியான கார்போஹைட்ரேட்டுகள் உடல் தேவைக்கு மீறி இருக்கும்போது   ட்ரைகிளிசரைடுகளாக மாற்றப்படுகின்றன. இது நம் உடலிலும்,ரத்தத்திலும் உள்ள ஒருவகை கொழுப்பு பொருளாகும்.  மேலும் ட்ரைகிளிசரைடுகள் அதிக அளவில் நமது உடல் அமைப்பில் இருக்கக்கூடாத ஒன்று. 


 4,30,000 பேரிடம் நடத்திய ஆய்வின்படி, இடுப்பில் ஒரு அங்குலம் கொழுப்பு கூடினால் இதய செயல் இழப்பு அபாயமானது  11 சதவீதம் இருக்கிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிதியுதவி செய்த சமீபத்திய ஆய்வு, நமது தினசரி உண்ணும் உணவில்  60-75 சதவீதத்தில் இருந்து கார்போஹைட்ரேட் உட்கொள்வதை 50-55 சதவீதமாகக் குறைக்க பரிந்துரைத்திருக்கிறது. எனில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடலின் சக்தியாக மாறாமல் ட்ரைகிளிசரைடுகளாக மாற்றப்படுகின்றன.


மேலும் மக்கள் தங்கள் இதயத்தை நல்ல முறையில் பராமரிப்பதற்கு உணவு கட்டுப்பாடு மட்டுமின்றி   வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்திருக்கிறது. இப்படியாக 150 மணி நேரங்கள் வாரத்தில் உடற்பயிற்சி செய்யும் நபருக்கு, இதயம் செயலிழப்பு அபாயம் முற்றிலும் குறைவதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.


இடுப்பில் மிகப்பெரிய அளவில் கொழுப்பு உள்ளவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 3.21 மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.


நீங்கள் வயிற்று கொழுப்பை குறைக்க விரும்பினால் எலுமிச்சை சாறை,தேன் கலந்து  பருகிவர, உங்கள் தொப்பையானது  கட்டுக்குள் வர தொடங்கும்.எலுமிச்சையில் விட்டமின் சி மற்றும் ஆக்ஸினேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. எலும்பிச்சை நீர் உங்களுக்கு நல்ல செரிமானத்தை அளிக்கிறது. இது உடலின் நச்சுத்தன்மை நீக்குகிறது. மேலும் கொழுப்புகளை கரைக்கிறது. 


இதைப் போலவே காலையில் எழுந்ததும் சீரக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றி வாருங்கள். இது கொழுப்பை எரிக்கும் ஒரு சிறந்த பானமாகும். இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வயிற்று வீக்கத்தை நீக்குவதற்கும், தொப்பை கொழுப்பை குறைப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


முழு தானிய உணவுகள் எப்பொழுதும் நார்ச்சத்துக்கள் நிறைந்தவை. இது இயற்கையில் மிகவும் சத்தானவை. இது உங்க குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு,உங்களுக்கு வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வைத் தருவதோடு, பசியையும் குறைக்கிறது. எனவே அதிக நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளுக்கு மாறுவது,உங்க உடல் எடையை குறைக்க உதவும்.இது தொப்பை கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.


மஞ்சளில் அதிகளவு குர்குமின் உள்ளது. இதை உணவுடன் சேர்க்கும் போது அழற்சியை விரட்ட முடியும். உடல் பருமன் கூட ஒரு அழற்சி நிலை தான். எனவே மஞ்சள் போன்ற குர்குமின் நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்து உங்க தொப்பையை குறைக்கும் சவாலில்   ஈடுபடலாம். இது உடலின் இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்கிறது.


மன அழுத்தம் மற்றும் பதற்றம் கார்டிசோல் போன்ற கொழுப்பை தூண்டும் ஹார்மோன்களை ஏற்படுத்துகிறது. கார்டிசோலின்  அளவு அதிகரிக்க அதிகரிக்க உங்கள் பசியானது தூண்டப்படும், இதனால் அதிகப்படியான கலோரி உணவுகளை உண்டு  உங்கள் வயிற்றின்  கொழுப்பின் கோடுகள் அதிகமாகும்.இதைத் தவிர்க்க யோகா மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டு  மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.


​போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.எடை இழப்பு பிரச்சினைகளுக்கு நீர் மிகவும் முக்கியம். நீங்கள் தாகம் இல்லாமல்   இருப்பது பசியை குறைக்கும். உணவுக்கு முன் தண்ணீர் குடிப்பதால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கலாம், இது உங்கள் வயிற்று கொழுப்பு அபாயத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உங்க வயிற்றின் கொழுப்பு தொப்பையை குறைக்க இது போன்ற முயற்சிகளை நீங்கள் செய்யலாம்.


சத்துள்ள ஆகாரத்தில் கவனம் செலுத்துங்கள். கூகுளில் வழியைத் தேடாமல் மருத்துவர் அறிவுரைகளுடன் உங்களின் தினசரி வாழ்வின் உணவையும், மருந்துகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்