உங்கள் சமையலில் உப்பு அதிகமாகிவிட்டால் இப்படி சரிசெய்யலாம். உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். அதேபோல் உப்பு அதிகமான பண்டமும் குப்பையில் தான் போட வேண்டியிருக்கும். ஆனால் ஆசை ஆசையாக நிறைய சமைத்திருக்கும் போது இப்படி உப்பு கூடிவிட்டால் அதை சரி செய்ய சில டிப்ஸ் இருக்கின்றன.


பச்சை உருளைக்கிழங்கு:


உங்கள் உணவில் உப்பு கூடிவிட்டால் அதில் பச்சை உருளைக் கிழங்கை சில துண்டுகள் வெடிப்போடுங்கள். அது அதீத உப்பை உறிந்து கொள்ளும். உருளையை உள்ளே போடும் முன் பலமுறை கழுவிவிடவும். அப்போது தான் மண் போகும். அதேபோல் தோலையும் நீக்கி விடவும். வெட்டிப் போட்ட உருளைக் கிழங்கு துண்டுகளை 20 நிமிடங்கள் அதிலேயே விட்டுவிடவும்.


அரிசி மாவு:


உங்கள் உணவின் அளவைப் பொறுத்து அதில் சிறு அரிசி மாவு உருண்டைகளை உள்ளே போடவும். அது அளவுக்கு அதிகமான உப்பை உறிஞ்சிவிடும். பின்னர் உணவை உண்ணலாம்.


ஃப்ரெஷ் க்ரீம்:


க்ரேவியில் உப்பு கூடிவிட்டால் அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். அது உப்பின் அளவைக் குறைத்துவிடும்.


வேகவைத்த உருளைக்கிழங்கு:


பச்சை உருளையைப் போடுவதுபோல் வேகவைத்த உருளையையும் சேர்க்கலாம். இது உங்கள் உணவை ஒரு புதிய உணவாகவே மாற்றிவிடும்.


தயிர்:


ஒரு டேபிள்ஸ்பூம் தயிர் சேர்த்து உப்பு கூடிய கிரேவியை 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்திருங்கள். இது உப்பின் அளவை ஓரளவு மட்டுப்படுத்திவிடும். 


அதிகமாக உப்பு சேர்த்தால் இதய நோய்கள் அதிகரிக்கும் என உலக சுகாதாரத்துறை (World Health Organisation) எச்சரிக்கை விடுத்துள்ளது.ஒருநாளுக்கு 5 கிராமிற்கு குறைவாக உப்பு எடுத்துக்கொள்வதனால்ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க உதவுகிறது. ஆகையால் எப்போதும் உப்பை அளவோடு உட்கொள்ளுங்கள்.


அதிக உப்பை நீங்கள் உணவில் சேர்த்தால், உங்கள் உடம்பு சில அறிகுறிகள் மூலம் எச்சரிக்கும். இதையும் லேசாக எடுத்துக்கொண்டால் பெரிய பிரச்சனையில் முடிய வாய்ப்பும் உண்டு.


- உப்புசம்


- அதிகரித்த இரத்த அழுத்தம்


- அடிக்கடி தாகம் எடுத்தல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்


- தொந்தரவான தூக்கம்


- பலவீனம்


- இரைப்பை மற்றும் குடல் பிரச்சினைகள் ஆகியவை இருந்தால் சற்று எச்சரிக்கையாக இருப்பது சிறப்பு.


துரித உணவு, பேக் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக உப்பு சேர்க்கபடும் அதனால் இந்த உணவுகளை அளவாக உட்கொள்வதன் மூலம் உங்களின் அரோக்கியம் காக்கப்படுகிறது.