ஒருவரது ஆரோக்கியத்துக்கான முதலீடு அவர் உண்ணும் உணவில் தான் தொடங்குகிறது. நீங்கள் சரியான உணவை உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால், பெரும்பாலான உடல்நலப் பிரச்சினைகளை எளிதாகத் தவிர்க்கலாம்.


அதிலும், பெண்கள் ஸ்ட்ரிக்ட்டாக டயட் உணவைப் பின்பற்றுவது அவர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது என்றும், டயட் உணவு எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் முன்னதாக ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரி தன் இன்ஸ்டா பக்கத்தில் முன்னதாகப் பகிர்ந்துள்ளார்.


”தாங்கள் டயட் உணவில் இருப்பதை வெளியே சொல்லவே இன்று பல பெண்களும் தயங்குகின்றனர். தங்கள் உடலை பார்த்துக்கொள்வது குறித்து பேச ஏன் வெட்கப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை” என ஆதங்கப்படுகிறார் ராஷி.


தங்கள் உடல்நலனைப் பாதுகாக்க பாலின பேதமின்றி அனைவரும் பின்பற்றத்தக்க ஐந்து ஆரோக்கியமான பழக்கங்களை ராஷி முன்வைக்கிறார். அவை பின்வருமாறு:




    • ஒரு முழுமையான உணவு உண்பதை விட ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடுங்கள். ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியை நீங்களாகவே தயார் செய்து எடுத்துச் சென்று முழு உணவைக் குறைத்துவிட்டு இதனை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

    • நாம் டயட்டில் இருப்பது, உடல் எடையைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள், பிசிஓஎஸ்ஸில் இருந்து விடுபட பின்பற்றும் உணவுமுறை, உடலை டிடாக்ஸ் செய்து பின்பற்றும் உணவுமுறை உள்ளிட்ட டயட் முறைகள் குறித்து எவரிடமும் மறைக்கத் தேவையில்லை. டயட் உணவுப் பழக்கம் குறித்து உங்கள் நண்பர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்றால் அவர்களின் ஆதரவு உங்களுக்குத் தேவையா? நேர்மையாக இருப்பது மன நலனுக்கும் மிக நல்லது.

    • உங்கள் பசியைக் கட்டுப்படுத்த தினம் 2 கப் கருப்பு காபி அருந்துங்கள். 250 மில்லிகிராம் காஃபின் உங்கள் இதயத்து நல்லது, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. 

    • கடைகளுக்கு உணவருந்தச் சென்றால் ஆரோக்கியமான உணவை வழங்கும்படி அவர்களிடம் வலியுறுத்துங்கள். கடைகளில் அதிகம் உணவருந்துபவர்கள் நிச்சயம் நீங்கள் வாங்கும் கடை உணவை மாற்றி அமைத்து வாங்குவதைப் பின்பற்றுங்கள்.

    •  






  • எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள். தினசரி இதை செய்ய முடியாவிட்டாலும், வாரத்துக்கு குறைந்தது 3 நாள்களாவது இதனைப் பின்பற்றுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.