Chapathi Dishes : சப்பாத்தி காலை உணவா சாப்பிட பிடிக்குமா? இந்த ரெசிப்பி இருந்தா கண்டிப்பா பிடிக்கும்..

சப்பாத்தி, ரொட்டி போன்றவை மிகவும் கலோரி குறைவான சத்துமிக்க உணவாக இருக்கின்றன.

Continues below advertisement

இந்தியாவில் அதிகமானோரின்  வாழ்வியலில்  முக்கிய பங்கு வகிப்பது ருசியான உணவு வகைகளாகும்   . அந்த வகையில் சப்பாத்தி, ரொட்டி போன்றவை வட இந்திய மக்களின் கலாச்சாரத்தில் முக்கிய உணவு வகைகளாக இவை சிறப்பான இடத்தை பெறுகின்றன. ஆனால் இன்று வட மாநில மட்டுமல்லாமல்  இந்தியா முழுவதும் இந்த ரொட்டி ,சப்பாத்தி போன்றன அனைத்து மக்களின் உணவு வகைகளிலும் கலந்துள்ளன . தற்போது  சப்பாத்தி, தொட்டி போன்றன நமது வீடுகளில் ஒரு தவிர்க்க முடியாத உணவாக உள்ளது. இந்த காலத்தில் மனிதர்கள் அதிக அளவு சத்துக் குறைபாடான உணவு உண்பதால் அவர்களுடைய உடல் நிலையானது முற்றிலும் பாதிக்கப்பட்டு அதிக உடல் பருமன் மற்றும் சர்க்கரை போன்ற நோய்களால் அதிகளவு பாதிப்படைகின்றனர். எனவே இவர்களுக்கு சப்பாத்தியானது ஒரு சிறந்த உணவாக இருக்கிறது .

Continues below advertisement

சப்பாத்தி பெரும்பாலும் அனைவராலும் ரசித்து உண்ணும் உணவாகவே இருந்து வருகிறது. இருந்த போதும் இது மிகவும் கலோரி குறைவான உணவாகவும் சத்துமிக்கதாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு சில வீடுகளில் சப்பாத்தி  ஒரு நாளில் ஒரு முறையாவது தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஏனென்றால் சப்பாத்தி ரொட்டி போன்றவற்றில் அதிக அளவு நன்மைகள் இருப்பதை மக்களின் ஊடாகவே நாம் அறிய முடியும்.உடலை கட்டுக்கோப்பாக, நோயில்லாமல் அளவான எடையுடன்  வைத்துக்கொள்ள விரும்புவர்கள் அதிகம் உண்ணும் உணவாக சப்பாத்தி காணப்படுகிறது. 

சப்பாத்தியை பல்வேறு விதமாக, அதில் வாய்க்கு ருசியாக சில துணைப் பொருட்களை சேர்த்து சமைத்து உண்ணலாம் .ஆனால் தினமும் ஒரே மாதிரி தயார் செய்து சப்பாத்தி சாப்பிட்டால் நமக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது. எனவே சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளும் குழம்பு மற்றும் சட்னி ஆகியவற்றை சரியான முறையில் நாம் விதவிதமாக செய்தால் அதன் ருசியானது மாறுபட்டு நமக்கு ஏற்படும் சலிப்பை அது அதிக அளவில் போக்கும். 

நாம் சப்பாத்தியை எந்த நேரத்தில் எடுத்துக் கொண்டாலும் ஆபத்து இருக்காது .ஏனென்றால் அனைத்து நேரங்களிலும் உண்ணக் கூடிய ஒரே உணவு சப்பாத்தி ஆகும். இது ஒரு சில உணவுகள் மட்டுமே சாத்தியமாகும். அதில் ஒன்று சப்பாத்தி என சொன்னால் மிகையாகாது.

 சப்பாத்தியை உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் , சர்க்கரை நோய் மற்றும்  கொலஸ்ட்ரால் போன்ற இதர நோய்களால் பாதிக்கப்பட்டோர் அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். அவர்களது வீட்டில் சப்பாத்தி என்பது தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் .இப்பொழுது அந்த சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடும் சுவைமிக்க ரெசிபிகளை தயார் செய்யும் எளிமையான  முறைகளை பார்ப்போம்:

1. தக்காளி தொக்கு;

தக்காளி தொக்கு தமிழகத்தில் சப்பாத்தியுடன் அதிகளவு  தொட்டு சாப்பிட பயன்படுத்தப்படுகிறது.
இதன் ருசியானது பொதுவாக அனைவராலும் விரும்பி துணை உணவாக ஏற்றுக் கொள்ள எடுத்துக் கொள்கின்றனர்.

இந்த தக்காளி தொக்கினை தயாரிக்கும் முறையானது மிகவும் எளிது மற்றும் குறுகிய நேர தயாரிப்பாகவும் இது உள்ளது:

இதனை தயாரிக்க தேவையான பொருட்கள்: தக்காளி ,வெங்காயம் இரண்டையும் ஒரு குறிப்பிட்ட அளவே எடுத்துக்கொள்ள வேண்டும் .இதனுடன் சேர்த்து கொஞ்சம் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கடுகு, கடலைப்பருப்பு, கடலெண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து சிறிதளவு கறிவேப்பிலை சிறிது போட்டு நன்றாக கலந்து நறுமணம் வரும் வரையில் சமைக்கும்போது  இதன் சுவையானது வேறு எந்த துணை உணவுக்கும் ஈடாகாது .

2. பச்சை பட்டாணி குருமா:

இதுவும் ஒரு எளிய வகை ரெசிபி ஆகும் .இது சப்பாத்திக்கு சிறந்த சைடிஷ் ஆக இருக்கும், இதனை தயாரிக்கும் முறையை பார்ப்போம்.

பச்சை பட்டாணி,
உருளைக்கிழங்கு ,
வெங்காயம் ,தக்காளி ,
பச்சைமிளகாய் ,மிளகாய் தூள் , 
கரம் மசாலா தூள் ,இஞ்சி பூண்டு விழுது ,கொத்தமல்லி - தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய் பால் மற்றும்
உப்பு  ஆகியவற்றை சேர்த்து நன்கு வேகவைத்து ஒரு சுவையான பச்சை பட்டாணி குருமா சப்பாத்திக்கு ஏற்றவாறு தயாரித்து உண்ணலாம்.

3. தக்காளி கார சட்னி:

சப்பாத்திக்கு துணையாக உண்பதற்கு கார சட்னி மற்றும் தேங்காய் சட்னி ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவற்றை தயாரிக்கும் முறை மிகவும் எளிது. தேவையான பொருட்கள் தக்காளி வெங்காயம் ,பூண்டு ,
கடலைப்பருப்பு ,வர மிளகாய் ,சிறிதளவு புளி ஆகியவற்றை  சேர்த்து சிறிது நேரம் வதக்கி அதனை அரைத்தால் சுவையான தக்காளி கார சட்னி ரெடி ஆகிவிடும்.

4. பன்னீர் பட்டர் மசாலா:

இவை சப்பாத்தியின் ருசியை இன்னும் அதிகரிக்க உதவுகிறது.

 பன்னீர் – 200 கிராம்,
வெண்ணை – 3 டீஸ்பூன்,
வெங்காயம் – 100 கிராம்,
தக்காளி – 150 கிராம்,
பூண்டுப் பல் – 10,
இஞ்சி – 1 துண்டு,
பட்டை – 2,
ஏலக்காய் – 2,
தனி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவிற்கு.
ஆகியவற்றை  சேர்த்து நன்கு சமைத்து சப்பாத்திக்கு சிறந்த ஒரு சைடிஸ் ஆக  இதனை எடுத்துக்கொள்ளலாம்.

5.முட்டை கிரேவி:

இதுவும் சப்பாத்திக்கு மிகச்சிறந்த சைடிஸ் ஆக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதன் சுவையானது அதிகளவில் விரும்பப்படுகிறது .இதை தயாரிக்கும் முறையும் மிகவும் எளிமையானது . தயாரிப்பதற்கு முட்டை மற்றும் தக்காளி வெங்காயம் ,முட்டை மசாலா கறிமசால் தூள், மஞ்சள்தூள் மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு மற்றும் சிறிதளவு எண்ணெய் ,உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் நன்றாக கலந்து நறுமணம் வரும் வகையில் சமைக்கும் போது சுவையான முட்டை கிரேவி  பத்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும்.

இவை அனைத்தும் பொதுவாக அனைவரது வீட்டிலும் சப்பாத்தி மற்றும் ரொட்டிக்கு தொடு உணவாக மிகக் குறுகிய நேரத்தில் தயாரிக்கப்படும்  ருசியான உணவுகளாகும்

Continues below advertisement
Sponsored Links by Taboola