Natural Sunscreen : சன் ஸ்க்ரீன் கண்டிப்பா பயன்படுத்துங்க.. ஆனா கூடவே இந்த 5 உணவுகளை தவிர்க்காம சாப்பிடுங்க..

இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் சூரியனில் இருந்து வரும் ஒளிக்கதிர்களில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்ள உதவும்.

Continues below advertisement

வெயில் என்றாலே பல பேருக்கு அலர்ஜிதான். அதுவும் குறிப்பாக பெண்கள் வெயிலில் செல்லவே அஞ்சுவர். காரணம் சருமம் கருப்பாகி விடும் என்பதால்தான். நம்மில் பலர் சருமத்தை தற்காத்துக்கொள்ள சன்ஸ் க்ரீன் லோஷனை பயன்படுத்துகிறோம். வெயிலால் கருத்துப்போன சருமத்தை சரி செய்ய பல்வேறு க்ரீம்களையும் பயன்படுத்துகிறோம். வெயிலால் கருமையான சருமத்தை சரி செய்ய நாம் சில ஆயிரங்களையும் செலவு செய்கின்றோம். 

Continues below advertisement

ஆனால் நீங்க வெறும் 5 வகை உணவுகளை உட்கொண்டால் இன்னும் சிறப்பு. கோடையில், அதிக நீர்ச்சத்து உள்ள உணவை உண்பது, உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றை நிர்வகிக்க உதவுகிறது, இது இழந்த திரவம் மற்றும் ஊட்டச்சத்துக்களை மேலும் நிரப்புகிறது. மேலும், அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட உணவுகள் நீரேற்றத்துடன் இருக்க உதவுகின்றன. மேலும் சூரியனின் கதிர்வீச்சை எதிர்க்கிறது. சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்க உதவும் உணவுகள் எவை என்று பார்க்கலாம் வாங்க...

1. எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு வெளியில் உள்ள கடும் வெப்பத்தைத் தணித்து, உடலை உடனடியாக குளிர்ச்சியடைய வைக்க உதவுகின்றன. ஆனால் எலுமிச்சை சாறு இயற்கையான சன்ஸ்கிரீனாகவும் செயல்படும் என்றும் சொல்லப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?  எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது புற ஊதா கதிர்களை விரட்ட உதவுகிறது, மேலும் சருமத்தில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

2. லஸ்ஸி 

தயிரில் தயாரிக்கப்படும் லஸ்சியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உணவில் இருந்து இரும்பு உறிஞ்சலுக்கு அதிகம் உதவுகின்றன. மேலும் தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. மேலும் தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தோலில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்க உதவுகிறது. 

3. கிரீன் டீ:

ஏராளமானோர் க்ரீன் டீயை உடல் எடையை குறைப்பதற்காகவே பயன்படுத்துகின்றனர். ஆனால் இது சருமத்திற்கு நல்லது என்றும் சொல்லப்படுகின்றது.  பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் காரணமாக, கருமை நிறத்தையும் தடுக்க உதவுகிறது. மேலும் இது சூரிய ஒளியின் எதிர்மறை விளைவுகளைத் தடுக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. 

4. தக்காளி:

தக்காளியில் உள்ள லைகோபீன் UVA மற்றும் UVB கதிர்வீச்சு இரண்டையும் உறிஞ்சி, வெயிலால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.

5. தேங்காய் தண்ணீர்:

தேங்காய் நீர் எப்போதும் இயற்கையான மாய்ஸ்சரைசர் என்று அறியப்படுகிறது, இது சருமத்தை. மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. தேங்காய் தண்ணீர் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுவதாக சொல்லப்படுகின்றது.

Continues below advertisement
Sponsored Links by Taboola