தமிழர் மருத்துவ வரலாற்றில் செம்பருத்திக்கு எனத் தனி இடம் உண்டு. இதனை சித்தர் கால மருந்து என்பார்கள். சூரணம், பொடி, பேஸ்ட், தேநீர் எனப் பலவகைகளில் இது மருந்தாகப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது...அப்படி என்ன இதற்கான தனிகுணம்? பார்க்கலாம்..


செம்பருத்தி இலை முதல் இதழ்வரை...குணநலன் நான்கு!


1. செம்பருத்தி இலை சாற்றின் விளைவை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின்படி அது நம் உடலின் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.எல்லா வகையான இதய நோய்களிலும் உயர் இரத்த அழுத்தம் என்பது பொதுவாகக் காணப்படும் நிலை இதற்குப் பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும் மக்கள் பெரும்பாலும் உணவு வழியிலான மாற்றத்தையே விரும்புகின்றனர். அந்த வகையில் செம்பருத்தி சாறு வாஸ்குலர் எண்டோடெலியத்திலிருந்து நைட்ரிக் ஆக்சைடு வெளியீட்டை ஏற்படுத்துகிறது, இது சிறுநீரக வடிகட்டுதலை மேம்படுத்த வழிவகுக்கிறது, இது அதன் டையூரிடிக் விளைவை எதிர்த்து இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.இருப்பினும் செம்பருத்தி சாறு உட்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும் பரிந்துரைக்கிறோம்.


2. பெருந்தமனி நாளங்களில் கொழுப்பு சேர்வது அத்தேரோஸ்கிளிராஸிஸ் எனப்படும் ஒருநிலை. ஆனால் பெருந்தமனி இதன்காரணமாகச் சிதைவடைவது ஆபத்தானது. லோ டென்ஸிட்டி லிப்போ ப்ரோட்டீன்களைக் குறைப்பதன் மூலம் இதுபோன்ற கொழுப்பு சேர்வதைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு செம்பருத்திச் சாறு பிரதானமான மருந்தாகக் கருதப்படுகிறது. செம்பருத்தி ரத்த நாளங்களில் ஏற்படும் காயங்களை ஆற்ற உதவுகிறது. சாற்றின் குணம் இந்த லிப்போ ப்ரோட்டின்களின் ஆக்ஸிஜனேற்றத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.




3. உடலின் மோசமான கொழுப்பின் சேர்மானம் பிரதானமாக ஆக்ஸிஜனேற்றத்தால் ஏற்படுகிறது. இந்த ஆக்ஸினஜேற்றத்தைத் தடுக்க ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். செம்பருத்தியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் குணநலன் அதிகம் உள்ளது. அதில் உள்ள  ஃபிளாவனாய்டுகள், பினோலிக் கலவைகள், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்றவை உடலின் ஆக்ஸிஜனேற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. 


4. அதிக கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் அல்லாமல் வீக்கத்தை எதிர்த்தும் செம்பருத்தி போராடுகிறது. வீக்கம் என்பது இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் மற்றொரு முக்கியக் காரணியாகும். இது அடிப்படையில் நமது உடல் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது என்பதற்கான அறிகுறி.ஆனால் நாள்பட்ட அழற்சி இரத்த நாளங்களில் பிளேக்குகளை ஊக்குவிக்கும் மற்றும் நம் திசுக்களை காயப்படுத்தும்.ஆனால் இதனை ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் தடுக்கலாம். செம்பருத்தி இதழுக்கு இந்த அழற்சியை எதிர்க்கும் பண்பு உள்ளது.இது ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதால் நாள்பட்ட வீக்கம் போன்ற நிலைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.  ஆனால் எதுவாயினும் இதனை உட்கொள்வதற்கு முன்பு உங்கள் இதயநல மருத்துவரை அணுகப் பரிந்துரைக்கப்படுகிறது.