வாஸ்து பற்றிய ஆர்வமும், நம்பிக்கையும் பரவலாக உள்ள இன்றைய காலகட்டத்தில் பொறியியல் விதிமுறைகளும், வாஸ்து சாஸ்திர விதிகளும் அனைத்து கட்டமைப்புகளிலும் கச்சிதமாக பொருந்தி வருவதில்லை. அடுக்குமாடி வீடுகளில் குடியேறும் பலருக்கும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மாடிப்படிகள் வாஸ்து விதிகளில் சொல்லப்பட்டுள்ள விதிகளுக்கு மாறாக உள்ளதாக மனதிற்குள் எண்ணுவது உண்டு. 


அந்த நிலையில் வாஸ்து ரீதியாக கடைப்பிடிக்க வேண்டிய எளிமையான முறைகள் பற்றி வாஸ்து வல்லுனர்கள் தெரிவிக்கும்  டிப்ஸ் இதோ


வீட்டின் உள்ளே அமைக்கப்படும் படிக்கட்டுகளுக்கு, அந்த இடத்தின் தென்மேற்கு பகுதி சிறந்த தேர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் அடுத்த இரண்டாவது சிறந்த தேர்வுகளாக இருக்கும். இந்த விஷயத்தில், படிக்கட்டு வடக்கிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கிச் செல்ல வேண்டும்.


மேல் நோக்கி ஏறுவது மற்றும் கீழ் நோக்கி இறங்குவது என்ற இரண்டு தத்துவங்களின் அடிப்படையை மாடிப்படிக்கட்டுகள் உணர்த்துகின்றன.  அதன் காரணமாக, முதல் படியில் கால் வைக்கும்போது ஏறுபவர் முகம் கீழ்த்திசைகளான கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி இருப்பது முறை. 


வீட்டுக்கு உட்புறமோ அல்லது வெளிப்புறமோ தேவையான இடத்தை தேர்வு செய்து மாடிப்படிகளை அமைக்கலாம். 


வீடுகளின் உட்புறம் படிக்கட்டுகள் அமைக்கும்போது அந்த இடத்தின் தெற்கு அல்லது மேற்கு பகுதியின் மத்தியில் அமைப்பது சிறப்பு. 


வீட்டுக்கு வெளிப்புறம் மாடிப்படிகள் அமைக்கும்போது மொத்த அமைப்புக்கு தென்கிழக்கு, வடமேற்கு பகுதிகளில் திறந்தவெளி படிகளாக அமைப்பது நல்லது. 


படிகளை இடதுபுறமிருந்து வலதுபுறமாக அமைப்பது நல்லது.


படிக்கட்டின் முதல் படியை வட்ட வடிவில் அமைக்கக் கூடாது.


படிகளின் எண்ணிக்கையை 3 ஆல் வகுத்தால் அதன் கடைசி எண் 2 ஆக இருக்க வேண்டும்.


படிக்குக் கீழ் எவ்வித கட்டுமானமும் இருக்கக் கூடாது. குறிப்பாக அறை இருக்கவே கூடாது.


வீட்டின் நடுவே மாடிப்படி கட்டுவது உகந்தது அல்ல.


படியை வடகிழக்கு நோக்கி வைத்தால் வீட்டில் செல்வத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும். உடல்நலக்குறைவும் ஏற்படும்.