வயது ஏற ஏற தோல் சுருக்கங்கள் தவிர்க்க முடியாது. உண்மையில் முதுமையின் ரேகைகளும் அழகே. ஆனால் இன்றைய காலகட்டத்தில் வெளிப்புற சுற்றுச்சூழல் மாசு. மோசமான உணவுப் பழக்கவழக்கம், பணி நெருக்கடி என பல்வேறு அழுத்தங்கள் காரணமாக 40 தொடங்கும்போதே சருமம் மோசமாக டேமேஜ் ஆகிவிடுகிறது. 


ஆகையால் அதிலிருந்து தப்பிக்க இதோ ஐந்து டிப்ஸ். 


1. வயது அதிகரிக்கும்போது சருமத்தில் ஏற்படும் கோளாறுகளில் மிகவும் முக்கியமானது சரும வறட்சி. அதனால் சருமத்தில் சில தடிப்புகள் சிராய்ப்புகள் போன்ற தோற்றங்கள் உண்டாகும். செதில் செதிலாக உதிர்வதுபோலவும் தோற்றம் வரும். இதனைத் தவிர்க்க நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூடவே அவரவர் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப மாய்ஸ்சரைஸர்கள் பயன்படுத்தலாம்.


குளிர், வெயில், மழை என எந்தப் பருவமாக இருந்தாலும் சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்வது அவசியம். ஆனால் ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு விதமான மாய்ஸ்சரைஸர் தேவைப்படும். அதன்படி நீங்கள் மாய்ஸ்சரைஸரை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். சரும நிபுணர் அறிவுரையின்படி இதுபோன்ற மாய்ஸ்சரைஸர்களைப் பயன்படுத்துவது சிறந்தது.


2. அதிகப்படியாக சூரிய ஒளியில் இருப்பது வயது ஏறும்போது சருமத்தை பாதிக்கும். அதனால் வெயிலில் கூடுதல் நேரம் இருக்கும் சூழல் உருவாகினால் சன் ஸ்க்ரீன் க்ரீம் மற்றும் லோஷன் பயன்படுத்திக் கொள்ளலாம். வெயில் உச்சிப் பொழுதில் வெளியில் செல்வதைத் தவிர்க்கலாம். ஸ்டோல், குளோவ்ஸ் போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டு தவிர்க்க முடியாத சூழலில் வெளியே செல்லலாம்.


3. ஒவ்வொருநாள் இரவும் முகத்தை நல்லதொரு க்ளென்ஸர் கொண்டு சுத்தம் செய்யலாம். அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி க்ளென்ஸருக்குப் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறது. அதேபோல், முகத்திற்கு ஸ்கரப்பர் பயன்படுத்துவதை 40ஐ கடந்தவர்கள் தவிர்க்கலாம் என்றும் பரிந்துரைக்கிறது.


4. இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறை. சரியான ஊட்டச்சத்து உடலுக்குச் செல்லாவிட்டால் நீங்கள் சோர்வாகவோ அல்லது நோயாளி போலவோ காட்சி அளிக்கக் கூடும். ஆகையால் சருமத்தைப் பாதுகாக்க நார்ச்சத்து, வைட்டமின், புரதம் நிறைந்த உணவை சாப்பிடலாம். இது 40 ஐ கடந்தவர்களுக்கு மடுமல்ல எல்லோருக்குமே உகந்தது.


5. கடைசியாக லைஃப்ஸ்டைல் அறிவுரை ஒன்றும் இருக்கிறது. நீங்கள் புகைபிடிப்பவர் என்றால் அதை நிறுத்திக் கொள்வது சருமத்தை பாதுகாக்கும். இது உங்களது சருமத்தை மட்டுமல்ல உடலையும் உயிரையும் பாதுகாக்கும்.


பளிச்சென்று இருக்கும் சருமம், மாசு மரு இல்லாமல் மிருதுவாக இருக்கும் சருமம் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் தூசும் மாசும் நிறைந்த இந்தக் காலக்கட்டத்தில் க்ளியர் ஸ்கின் என்பது மிகப்பெரிய சவால் தான். ஆனாலும் சில எளிமையான வழிமுறைகள் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம்.


5 வயது குழந்தை கூட மன அழுத்தத்திற்கு உள்ளாகும் கால கட்டம் இது. வயது ஆக ஆக அழுத்தங்களுக்கு பஞ்சமில்லை. எனவே டீ ஸ்ட்ரெஸ் செய்யுங்கள். மன அழுத்தம் அதிகமானால் ஒரு நடை பயிற்ச்சி, சைக்கிளிங், நீச்சல் என ஏதேனும் ஒன்றின் மீது கவனம் செலுத்துங்கள். பேட்மின்டன் விளையாடலாம். இல்லாவிட்டால் யோகா பயிற்சி மேற்கொள்ளலாம். இவ்வாறாக செய்வதால் மன அழுத்தம் நீங்கும். உள்ளத்தின் கண்ணாடி தானே முகம். அதனால் அகத்தூய்மை முகப்பொலிவுக்கு முக்கியம்.