நாளை காதலர் தினம்  கொண்டாடப்படவுள்ளதால் இன்றே பூக்களின் விலை வழக்கமான விலையில் இருந்து எகிறியுள்ளது. ஒரு ரோஜாவின் விலை குறைந்த பட்சம் 35க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நாளை இன்னும் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

 

காதலர் தினம் வந்துவிட்டால் விலை அதிகரிக்கும் பொருட்களாக இருப்பதில் முதன்மையானது பூக்கள் தான். அதிலும், ரோஜாவுக்கு இருக்கும் மவுசு மற்ற எந்த பூக்களுக்கும் இல்லை எனலாம். ரோஜாவை காதலன் காதலிக்கு தருவதோடு முடிவதில்லை. காதலியும் காதலனுக்கு தருவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. 

 

மேலும், இந்த தினத்தையும் இவர்களையும் குறிவைக்கும் பூ வியாபாரிகள், ஒரு வளர்பிறை முகூர்த்தத்தில் விற்கப்படும் விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு பூக்களை விற்பனை செய்வது  வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் எனலாம். இந்த வாடிக்கை நமது உள்ளூர் வியாபாரி தொடங்கி சர்வதேச வியாபாரி வரை இதே நோக்கத்தில் தான் உள்ளனர் எனலாம்.
  

 

இன்று ஒரு ரோஜா குறைந்த பட்சம் ரூ. 35க்கும் அதிகபட்சம் ரூ. 50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. “எங்க வீட்டுல ரொம்ப ஸ்டிரிக்ட் எனச் சொல்லும் காதலர்கள் அவர்களின் காதலர் தினத்தை இன்றோ அல்லது காதலர் தினத்துக்கு அடுத்த நாளோ கொண்டாகிக் கொள்கிறார்கள். அவர்களும் இந்த பூ வியாபாரிகளின் பார்வையில் இருந்து தப்பி விடமுடியாது. அவர்களை டார்கெட் செய்ததுதான் இன்றைய பூக்களின் விலை உயர்வுக்கு காரணமாம்.