பிப்ரவரி 13 - திங்கட்கிழமை 


நல்ல நேரம்:


காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


கௌரி நல்ல நேரம்:


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை


இராகு:


காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை


குளிகை:


மதியம் 1.30 மணி முதல் காலை 3 மணி வரை


எமகண்டம்:


காலை 10.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை


சூலம் - கிழக்கு 


 


இன்றைய ராசிபலன்கள்:


மேஷம்


உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம்  உண்டாகும். வர்த்தக பணிகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் விவேகம் வேண்டும். ஆடம்பர பொருட்களால் நெருக்கடிகள் ஏற்படும். இரக்கம் வேண்டிய நாள்.


ரிஷபம்


கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அறிமுகம் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.


மிதுனம் 


நெருக்கமானவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சமூக பணிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை உண்டாகும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.


கடகம்


பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழல் நிலவும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். கால்நடைகளின் மூலம் லாபம் மேம்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.


சிம்மம் 


பயணங்களில் அனுபவமும், அனுகூலமும் உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனை சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். செய்கின்ற முயற்சிக்கு உண்டான பலன்கள் ஏற்படும். விதண்டாவாத சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பும், ஆதாயமும் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.


கன்னி


உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் வரவுகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம்  கிடைக்கும். புதுவிதமான சூழலால் திருப்தியான மனநிலை உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.


துலாம்


குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். பயனற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். மனதை உறுத்திய கவலைகள் நீங்கும். கனிவு வேண்டிய நாள்.


விருச்சிகம்


பூர்வீக சொத்துக்களின் வழியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு தோன்றி மறையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். திருப்திகரமான நாள்.


தனுசு


இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் கைகூடும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் காலதாமதமாகி நிறைவுபெறும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். ஓய்வு கிடைக்கும் நாள்.


மகரம்


உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் எளிதில் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


கும்பம்


மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய முயற்சிகளுக்கு மாறுபட்ட முறையில் வியூகங்களை அமைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். இணையம் தொடர்பான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.


மீனம்


மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய முயற்சிகளுக்கு மாறுபட்ட முறையில் வியூகங்களை அமைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். இணையம் தொடர்பான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.