விசேஷ நாட்களில் உங்களின் பிட்னெஸ் மிஸ் செய்கிறீர்களா? எடுத்துக்கொள்ளும் டயட் உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை தவிர்க்கும் சூழ்நிலை உருவாகும். இனிப்புகள், ஸ்னாக்ஸ் நிறைய சாப்பிடும் எண்ணம் இருக்கும். இனிப்புகளை பார்த்தவுடன், கிரேவிங் வரும். முதலில் சாப்பிடுவோம், பின் பிட்னெஸ் பார்த்து கொள்ளலாம் என தோன்றும். இது அனைவருக்கும் தோன்றும் ஒரு ஆசைதான்.


இந்த நாட்களில் என்ன மாதிரியான விஷயங்களை பின்பற்றலாம் பிட்னெஸ்ஸும் முக்கியம், பண்டிகையும் முக்கியம். பண்டிகையின் இனிப்புகளையும் ருசிப்போம். அதே சமயம் உடல் எடையை மெயிண்டெய்ன் செய்வதும் முக்கியம்..




இயற்கை இனிப்புகளை பயன்படுத்துங்கள் : இயற்கையிலே சில உணவுகள் அதிக இனிப்பு சுவையுடன் இருக்கும். இவற்றை உணவுடன் சேர்த்து கொள்ளுங்கள். உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்தி பழம், தேன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பேரீச்சம் பழ லட்டு, எள்ளு உருண்டை, கம்பு உருண்டை போன்ற பாரம்பரிய இனிப்புகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


உடற்பயிற்சி - சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் வீட்டு வேலைகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றை பின்பற்றுவது போன்ற விஷயங்களால் நேரம் கிடைக்காமல் இருக்கும். நீங்கள் எப்போதும் 1 மணிநேரம் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால்,  பண்டிகை நாட்களில் 20 நிமிடங்கள் மட்டும் பயிற்சிகள் செய்தால் போதும். 20 நிமிடங்கள் இன்டென்சிவ் ஆன பயிற்சிகள் செய்தால் போதுமானது.




நடனம் மற்றும் கொண்டாட்டம் - பண்டிகை நாட்களில் அதிகம் கொண்டாட்டமாக இருக்கும் போது ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் இருக்கும். இது போன்ற  பயிற்சிகளில் ஈடுபடலாம். ஒரே இடத்தில் அமர்ந்து சீட்டு ஆடுவது, போன்றவற்றை தவிர்த்திடுங்கள்




பண்டிகை நாட்களில் அதிகம் போன் பேசும் சூழல் ஏற்படும். உறவுகள், நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்து தெரிவிக்கவேண்டும். அந்த நேரத்தில் நடந்து கொண்டே பேசலாம். இதுவும் ஒரு உடற்பயிற்சியாக இருக்கும். நீண்ட நேரம் உட்காருவதில் இருந்து ஒரு மாற்றாக இருக்கும்.


பழங்கள் - உணவில் அதிகம் பழங்களை சேர்த்து கொள்ளுங்கள். பண்டிகை நாட்களில் நீங்கள் எப்போதும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், ஜூஸ் , இளநீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.




ஸ்னாக்ஸ் - ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் எல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள். உலர் பழங்கள், காய்கள், பழங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். பண்டிகை நாட்களில் இது போன்றவற்றை ஒரு வேலை உணவாக எடுத்து கொள்வது, அன்றைய நாளுக்கான ஊட்டச்சத்து கிடைக்க வழி செய்கிறது.


பண்டிகை தினத்திலும் உங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இது போன்றவற்றை செய்யுங்கள்.