தமிழ் திரையுலகிற்கு மாநகரம் என்ற எதார்த்த திரைக்களத்துடன் கால் பதித்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ’கைதி’ என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் ஹிட் அடிக்கவே. விஜயை வைத்து , ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். படம் விஜய் ரசிகர்களுக்கு மாபெரும் ட்ரீட்டாக அமைந்தது.
வட்டார வழக்கில் ‘நடிப்பில் பிண்ணில் பெடலெடுப்பாங்க’ என்று கூறுவது போல நடிப்பு சாணக்கியர்களாக விளங்கும் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்ட நடிகர்களை ஒரே ஃபிரேமுக்குள் கொண்டுவரும் முயற்சியை கையில் எடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு விக்ரம்(Vikram) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி , இந்திய திரையுலகையே அதிர செய்தது. விக்ரம் படத்தை கமல்ஹாசனுக்கு சொந்தமான , ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இப்படத்தில் நடிப்பு அசுரர்களான கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளது ஒரு புறம் என்றாலும் காளிதாஸ், நரைன், ஷிவானி, மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி உள்ளிட்ட மேலும் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த நட்சத்திர பட்டாளத்தின் மேலும் ஒருவராக மலையாள சினிமாவின் ரைட்டர் - தயாரிப்பாளர், சிறந்த நடிகருமான செம்பன் வினோத் ஜோஸ் இணைந்துள்ளார். இவர் 2018ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்தை பொறுத்தவரை நடிகர்களின் தேர்வு மாஸாகவே இருப்பதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தேசிய விருது வாங்கிய நடிகர்களை ஒன்றாக சேர்த்து படமெடுக்கிறார் லோகேஷ். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில்,காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் தேசிய விருது வென்ற நடிகர்கள். இந்த வருசையில் இப்போது செம்பன் வினோத் ஜோஸ் இணைந்துள்ளார். நட்சத்திர பட்டாளம் தாண்டி தேசிய விருது வென்ற பட்டாளம் என்ற முனைப்பில் காய் நகர்த்தி வருகிறார் லோகேஷ். நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விக்ரம் படம், லேகேஷின் வெற்றிப்படத்தில் மேலும் ஒரு படமாக அமைய வேண்டுமென்பதே அனைவரின் ஆசையும், எதிர்பார்ப்பும்.