ஜூன் 18-ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது


தந்தையர் தினம் 1910-இல் முதன்முறையாக கொண்டாடப்பட்டது. அப்போதிலிருந்து கொண்டாடப்படும் இந்த நாளுக்கு அமெரிக்காவில் விடுமுறை என்பது தன ஹைலைட். கொண்டாட தொடங்கி ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 1916-ஆம் ஆண்டு முதல், இந்த நாள் அதிகாரப்பூர்வ விடுமுறையாக மாறியது. ஒரு கட்டத்தில் பல மக்கள் தங்கள் தந்தைகளை கௌரவிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதால், இந்த நாள் அமெரிக்கா முழுவதும் பரவியது. மகள்/மகன் அப்பாவுக்கு பரிசுகளை வழங்குவது அல்லது அவர்களின் வாழ்க்கையை கௌரவிப்பதற்காக தங்கள் தந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது போன்ற வழிகளில் இவை கொண்டாடப்படுகிறது.


தந்தையர் தினம் 2023: தேதி


இந்த ஆண்டு, தந்தையர் தினம் ஜூன் 18 தேதி, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும். ஏனென்றால் பொதுவாகவே அமெரிக்காவில் தந்தையர் தினம் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதேபோல பின்தொடர்ந்து இந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி கொண்டாடப்படும்.



யார் முன்மொழிந்தது?


தந்தையர் தினம் அன்னையர் தினத்தை தொடர்ந்து உருவாக்கப்பட்டது. இது 1908-இல் வணிக விடுமுறையாக மாறியது மற்றும் 1914-இல் ஜனாதிபதி உட்ரோ வில்சனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அன்னையர் தினம் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தாய்மார்களுக்காக ஒரு நாள் அர்ப்பணிக்கப்பட்ட பிறகு, ஸ்போகேனின் சொனோரா ஸ்மார்ட் டோட் என்பவர், தந்தைகளுக்காக இதேபோன்ற நாளை கொண்டாட ஊக்கமளித்தார். 


தொடர்புடைய செய்திகள்: Special Olympics: 190 நாடுகள்.. 7 ஆயிரம் வீரர்கள்... ஜூன் 17ல் தொடங்கும் சிறப்பு ஒலிம்பிக்.. பெர்லின் கிளம்பிய இந்திய அணியினர்..!


ஏன் இந்த தேதி?


சொனோரா ஸ்மார்ட் டோட் தன்னோடு சேர்த்து 14 குழந்தைகளுடன் தாய் இல்லாமல் தந்தையால் தனியே வளர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தந்தையின் சேவையை மதிக்க முடிவு செய்த அவர் அதற்கான சமூகத்தின் ஆதரவையும் பெற்றார். இது ஜூன் 19, 1910 அன்று முதல் தந்தையர் தினத்தை கொண்டாட வழிவகுத்தது. இது படிப்படியாக அமெரிக்காவின் மற்ற பகுதிகளுக்கும் பரவிய நிலையில், 1916 இல், வில்சன் விடுமுறையாக அங்கீகரித்தார்.



அமெரிக்காவில் நிரந்தர விடுமுறையாக மாறிய நாள்


1924 ஆம் ஆண்டில், ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜ் மற்ற மாநிலங்களுக்கும் இந்த நாளைக் கொண்டாட அறிவுறுத்தினார். 1966 ஆம் ஆண்டில், ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன் தந்தையர்களை கௌரவிக்கும் முதல் ஜனாதிபதி பிரகடனத்தை செய்தார் மற்றும் தந்தையர் தினத்தை கொண்டாட ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை உறுதி செய்தார். 1972 இல் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் கையெழுத்திட்ட பிறகு, தந்தையர் தினம் அமெரிக்காவில் நிரந்தர விடுமுறையாக மாறியது குறிப்பிடத்தக்கது.