பருவநிலை மாற்றத்தால் இனி தூக்கமும் கெடும்... ஆராய்ச்சியாளர்கள் சொன்ன ஷாக் நியூஸ்!!

பருவ நிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் மனிதர்களின் தூக்க நேரம் பெருமளவு குறையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

பருவ நிலை மாற்றத்தின் விளைவாக உலகில் மூலை முடுக்குகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது மனித வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

Continues below advertisement

அதன்படி, மனிதன் தூங்கும் நேரத்தில் பருவ நிலை மாற்றம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தூக்க நேரம் Vs பருவ நிலை மாற்றம்

டென்மார்க்கின் கோபன்ஹேகன் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி,  தட்ப வெப்பநிலை மாற்றம் காரணமாக 2099 ஆம் ஆண்டு வாக்கில் சராசரி ஒவ்வொரு மனிதரின் ஆண்டு தூக்கம்  50 முதல் 58 மணி நேரங்கள் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அறை வெப்பநிலையானது குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தூக்க நேரம் பாதிப்புக்குள்ளாகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

மேலும், மனிதர்கள் அதிக வெப்பநிலையை விட, குளிர்ந்த குறைவான வெப்பநிலைக்கு எளிதில் பழகிக் கொள்கிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளனர். 

 

ஏசியில் தூக்கம் குறித்த ஆராய்ச்சி...

மேலும் இந்த ஆய்வாளர்கள், எதிர் காலத்தில் உலகளாவிய பருவநிலை ஆராய்ச்சியாளர்கள், தூக்கம் குறித்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்களுடன் இணைந்து, உலகம் முழுவதும் தூக்கம் மற்றும் நடத்தை குறித்த பகுப்பாய்வுகளின் நோக்கம் குறித்து மக்களிடம் விளக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், குளிர் சாதன வசதி இல்லாமல், வெப்பமான காலநிலையில் வாழும் மக்களின் தூக்கம் குறித்து ஆய்வு செய்வதையும் அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola