உடல் வலியை குறைக்க சில உணவு முறைகளை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நமாமி அகர்வால் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உடல் வலி அனைத்து வயதினரும் ஏதேனும் ஒரு கட்டத்தில் அனுபவித்து இருப்பார்கள். உடல் வலி வருவதற்கு பொதுவான காரணமாக இருப்பது ஸ்ட்ரெஸ் (மனஅழுத்தம் ) . இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். அதனால், உடல் வலி, வரும். அன்றாட செயல்பாடுகள் கூட நிறைய பேருக்கு மனஅழுத்தத்தை தருகிறது. இது நீண்ட நாட்களுக்கு தொடர்வதால் உடல் வலி வருகிறது. இரண்டாவது காரணம், உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல், உடலின் நீர் சத்து குறைவதனால் உடல் வலி வருகிறது.ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் ஒருவர் குடிக்க வேண்டும். அதற்கு குறைவாக குடித்தால் , உடலில் அனைத்து செல்களுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அது தசை வலிகளை தரும்.
இயற்கையான முறையில் உடல் வலியை எப்படி சமாளிக்க முடியும் என்பதை விளக்கி ஊட்டச்சத்து நிபுணர் நமாமி அகர்வால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கி உள்ளார்.
வீடியோவில் இவர் குறிப்பிட்டு இருப்பது என்னவென்றால், உடல் வலியை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று தசை வலி, இரண்டாவது எலும்பு மூட்டுகளில் வரும் வலி. இதை சமாளிக்க சில வைத்திய முறைகள் இங்கே ,
- சரிவிகித உணவு - ஒரு நாள் முழுவதும்,உடல் இயங்குவதற்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு தான் சரிவிகித உணவு. கார்போஹைடிரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின், மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்த உணவை தினம் எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்து கிடைக்க தினம் ஒரு 20 நிமிடம் வெயிலில் நிற்க வேண்டும். வைட்டமின் டி சத்தானது, எலும்புக்கு தேவையான கால்சியம் சத்தை உணவில் இருந்து எடுத்து கொள்ள உதவியாக இருக்கும். வைட்டமின் டி ஆனது பெரும்பாலான உடல் வலி வராமல் தடுக்கும்.
- போதுமான அளவு தண்ணீர் குடிப்பது. அதாவது,ஒரு நாளைக்கு 2- 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் இருக்கும் கழிவுகள் நீராக வெளியேறும். வியர்வையாகவோ, சிறுநீரக உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறும். இதை சரி செய்ய உடலுக்கு தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் ஆனது மூட்டுகளில் நீர்சத்து நிறைந்து இருக்கவும், தசை வலி வராமல் பாதுகாக்கும். அதனால் நீர் சத்து அத்தியாவசியமானது.
- இயற்கையான மசாலா பொருள்களை உணவில் சேர்ப்பது - இஞ்சி,மஞ்சள், இலவங்கப்பட்டை, மற்றும், பூண்டு ஆகியவை இயற்கையாக கிடைக்கும் மசாலா பொருள்கள். இவற்றை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்வது அவசியம். இதில் வீக்கத்தை குறைக்கும் தன்மை உடையது. அதனால் இதை எடுத்து கொள்ளலாம்