பொதுவாக சாலட் என்பது, சமைக்கப்படாத பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும்.நமது உடல்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக காய்கறிகள் மற்றும் பழம் வகைகள் முக்கிய காரணமாக உள்ளது.
இது கேரட், வெள்ளரி, சலரி, காளான், வெங்காயம் போன்ற மரக்கறிகள், அன்னாசி, மாம்பழம், அவகாடோ போன்ற பழங்கள், பாதாம், வால்நட் போன்றவைகள் கலந்து சாலட் ஆனது தயாரிக்கப்படுகின்றது.
பெரும்பாலும் பச்சையாக, பெரிதும் கொழுப்பு இல்லாத பொருட்களால் சாலட் செய்யப்படுவதால் சாலட் உடலுக்கு ஆரோக்கியம் அதிகமாக கொடுக்கின்றது என்று கூறப்படுகிறது.நாம் ஒவ்வொரு நாளும் ஒரு கிண்ணம் சாலட் சாப்பிடுவது நமது உடலுக்கு நல்லது மற்றும் இதனை தயாரிப்பது மிகவும் எளிமையானது.
நமது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நமது வாழ்வில் முக்கியமான ஒன்றாகும். உடலுக்கு தேவையான அதிக ஊட்டச்சத்து உள்ள உணவுகளை சாலட் மூலமாக நம் நமது உணவில் சேர்ப்பது மிகவும் எளிது. நாம் தினமும் சாலட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதற்கான ஒன்பது காரணங்களை இப்பொழுது பார்ப்போம்.
நாம் சாலட் சாப்பிடுவதற்கான 9 காரணங்கள்:
1. சாலட் நார்ச்சத்துகளின் ஆதாரம்:
○ ஒரு நாளைக்கு ஒரு கிண்ணம் அளவு சாலட் ஆனது சாப்பிடும் போது அதில் நம் உடலுக்கு போதுமான அளவு நார்ச்சத்தானது கிடைக்கிறது.
○ இது நம் உடல்களில் உள்ள கெட்ட கொழுப்பு புரதத்தை குறைக்க உதவுகிறது.
2.சாலட் என்பது பல ஊட்டச்சத்துக்களின் கலவையாகும்:
○ இந்த சாலடில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்தானது நமது உடம்பில் உள்ள நரம்பியல் குறைபாடுகளை குறைக்க உதவுகின்றது.
○ நாம் இதற்கு தகுந்துவாறு காய்கறிகளை தேர்வு செய்து நமது சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
3.சிறந்த எடை கட்டுப்பாட்டிற்கு நமது உணவில் சாலட் அளவை அதிகரிக்கலாம்.
○ மனிதர்களுக்கு அதிக அளவு ஆபத்துக்களை தரக்கூடிய உடல் எடை அதிகரிப்பதாகும்.
○ உடல் எடையானது அதிகரித்தால் நமது உடலில் தேவையற்ற சில நோய்கள் ஏற்படாது வாய்ப்பு உள்ளது.
○ எனவே இப்பொழுது பெரும்பாலும் மக்கள் உடல் எடையை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.
○ ஆனால் சாலட்களில் நமது உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துகளுக்கு ஏற்ப அதன் அளவை அதிகரித்தும் குறைத்தும் சேர்த்துக்கலாம் .
4.நமது உடலில் நல்ல கொழுப்பிற்கு சாலட் ஆனது சிறந்த ஆதாரமாகும்.
○ நமது உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புக்கு எள், அரைத்த ஆளி மற்றும் சியா போன்ற வறுத்த மற்றும் பச்சை விதைகளை மற்றும் வெண்ணெய் துண்டுகளையும் நாம் சாலட்களில் சேர்க்கலாம்.
○இதனால் நமது உடலில் நல்ல கொழுப்பு சத்துகளானது அதிகமாகிறது.
5.சாலட்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது எலும்புக்கு வலிமை அதிகரிக்கும்:
○ நமது உடம்பில் உள்ள எலும்பு வலிமையாக இருந்தால் தான் நம்மால் ஆரோக்கியமாகவும் துடிப்புடனும் இயங்க முடியும்.
○ ஆனால் நமது உடம்பில் ஏற்படும் வைட்டமின் கே குறைவானது எலும்புகளின் வளர்ச்சியையும் தாதுக்களையும் வலிமை இழக்க செய்கிறது.
○ நாம் எலும்புகளில் தாதுக்கள் அடர்த்தி மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க முட்டைக்கோஸ் வகைகள் மற்றும் கீரைகளை சாலட்களில் சேர்த்து உண்ணலாம்.
6.சாலட் நல்ல கண்பார்வையை பராமரிக்க உதவுகிறது:
○ இந்தக் காலத்தில் இளம் வயதிலே அதிகளவு கண் பார்வை கோளாறுகள் நமக்கு ஏற்படுகிறது.
○இந்த சாலட்களில் உள்ள ரோமெய்ன் மற்றும் கீரை போன்ற பச்சை இலைக் காய்கறிகள் நமது கண்களில் ஒளியைக் கட்டுப்படுத்த உதவும் கரோட்டினாய்டுகளைக் அதிகமாக கொண்டுள்ளது.
○இவை நமது கண்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களின் உருவாக்கத்திலிருந்து நமது கண்களைப் பாதுகாக்கின்றனது.
7.தினமும் சாலட் சாப்பிடுவது தசைகளின் செயல்திறனை அதிகரிக்கிறது;
○இந்த சாலட்களில் உள்ள கீரை போன்ற இலை மற்றும் பச்சை காய்கறிகளில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் நமது தசைகளின் செயல்திறன்களையும் மேம்படுத்துகின்றது.
○எனவே இது அதிக ஆற்றலை உற்பத்தி செய்து நமது தசைகளுக்கு அதிக சக்தி அளிக்க உதவுகின்றது.
8.சாலட் இதய நோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது:
○நாம் ஒவ்வொரு நாளும் நமது உடலுக்கு தேவையான மற்றும் மிகவும் பொருத்தமான சாலட்டை உட்கொள்வதால் நமது உடலில் நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் அளவு அதிகரிக்கும்.
○இவைகள் நமது உடலில் ஏற்படும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற எந்த இதய நோய்களையும் பெரிதும் குறைக்கிறன்றது.
9.தினமும் சாலட் சாப்பிடுவது நமது உடலின் சருமத்தை மேம்படுத்தும்:
○ நாம் அனைவரும் விரும்புவது நமது உடலில் உள்ள சருமமானது தெளிவாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்பதாகும். இந்த சாலட் ஆனது அதற்கு அதிக அளவில் உதவுகிறது என்று சொன்னால் அது மிகையாகது.
○இதில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் நம் உடலில் நீர்ச்சத்தை மேம்படுத்துகின்றனது.
○இது நமது உடலில் தெளிவான தோல் மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்கு உதவுகிறது