PS1: 5 மொழிகளில் டீஸர்.. 5 மெகா ஸ்டார்கள்: பொன்னியின் செல்வன் கலக்கல் அப்டேட்!

Ponniyin Selvan: 5 மொழிகளில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் 5 மொழிகளிலும் 5 மெகா ஸ்டார்கள் ட்ரெய்லரை வெளியிடுகின்றனர்.

Continues below advertisement

5 மொழிகளில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்(Ponniyin Selvan) படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் 5 மொழிகளிலும் 5 மெகா ஸ்டார்கள் ட்ரெய்லரை வெளியிடுகின்றனர்.

Continues below advertisement

தமிழில் கமல்ஹாசன், இந்தியில் அனில் கபூர், மலையாளத்தில் பிருத்திவிராஜ், தெலுங்கில் ரானா டகுபதி மற்றும் கன்னடத்தில் ஜெய்ந்த் கைகினி ட்ரெய்லரை ஒரே நேரத்தில் வெளியிடுகின்றனர்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அந்த வகையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது. அதனைத் தொடர்ந்து பொன்னி நதி பாடலின் மேக்கிங், ஐமேக்ஸ் திரை வடிவில் படம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ஆகஸ்ட் 19 ஆம் தேதி 2 ஆம் பாடலான சோழா சோழா பாடல் வெளியானது என தொடர்ந்து ரசிகர்களை ஒரு எதிர்ப்பார்ப்பிலே படக்குழு வைத்துள்ளது. 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா நாளை (செப்டம்பர் 6 ஆம் தேதி) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

இந்த ட்ரெயலரை தமிழ் திரை ரசிகர்கள் பெரும் கொண்டாடமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola