கோடை காலம் என்றாலே சரும பராமரிப்பு கொஞ்சம் சவாலானதுதான். சூரியகதிர்களால் தோலில் டான் ஏற்படுவது வழக்கமானதுதான். தோல் பொலிவிழந்து காணப்படுவது, தோல் வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகளை கோடைக்காலத்தில் சருமம் எதிர்கொள்ளும் சிக்கல்கள். இதிலிருந்து விடுபடுவதற்கு சந்தைகளில் பல்வேறு கிரீம்கள் கிடைத்தாலும், அவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. அதேவேளையில், பலரும் இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் க்ரீம்களை விரும்புகின்றனர். ஆனால், வெயில் காரணமாக தோல் பொலிவற்று போவதற்கு வீட்டியேலே எளிதாக ஃபேஸ் பேக்குகளைத் தயாரித்து பயன்படுத்தலாம். வெயில் கருமையை நீக்க எப்படி பேக் தயார் செய்வது. இதோ உங்களுக்கான டிப்ஸ்!




கடலை மாவு-தயிர்:


சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பொலிவுடன் பாதுகாக்கும் வேலையை திறம்பட செயவதில் கடனை மாவு- தயிர் காம்போவுக்கு முதலிடம் தரலாம். ஆம். கடலை மாவு உங்கள் சருமத்தில் பல அற்புதங்களை நிகழ்த்திவிடும். கடலை மாவுடன் தயிர் சேர்த்து முகம், கழுத்து, கை, கால் என தடவி, பிறகு 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால். உங்கள் சருமம் பளீர் எனச் சிரிப்பதை நீங்கள் உணரலாம்.


வாழைப்பழம்:


சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள மிகச்சிறந்தது என்றால் அது வாழைப்பழ. இதோடு பால், அல்லது தேன் சேர்த்து மசித்து பேக் ஆக பயன்படுத்தலாம்.


வெயிலால் சரும் பொலிவிழந்துப்போவதை மீட்க, வைட்டமின் சி மிகுந்த ஆரஞ்சு பழம் நன்கு உதவும். வாழைப்பழத்தை நன்கு குழைத்து அதனுடன் சிறிது ஆரஞ்சு சாறு சேர்க்கவும். சிறிது தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடங்கள்  கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். முகம் பளிச்சென்று இருக்கும்.


 முல்தானி மட்டி:


முல்தானி மட்டி சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை உறிஞ்சிக் கொள்கிறது. எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த பேஸ்பேக்காக இருக்கும். முகத்தில் ஏற்படும் கரும் புள்ளிகள், கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் திறன் முல்தானி மட்டிக்கு இருக்கிறது. இதை தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டருடன் சேர்த்து பயன்படுத்தலாம்.




வெள்ளரிக்காய் – தேன்:


வெள்ளரிக்காய் குளிர்ச்சித் தன்மை கொண்டது. வெள்ளரிக்காய சாறு சரும பராமரிப்பிற்கு உகந்தது. வெயிலினால் ஏற்படும் தாக்கத்திலிருந்து விடுபட, வெள்ளரிக்காய் சாறு மற்றும் தேன் கலந்து பேக்காக பயன்படுத்தலாம். சருமம் மென்மையாக இருக்கவும் இது உதவும். 


​ரோஸ் வாட்டர் – சந்தனம்:


சந்தனம் சருமத்தை மட்டுமல்ல, உடலையும் சேர்த்து குளிர்ச்சியாக வைக்கும். மேலும், சந்தனம் உடல் சூட்டினால் ஏற்படும் கட்டிகள், சரும பிரச்சனைகளை தடுக்கும். முகத்தை பளபளவென வைத்துக் கொள்ள, இயற்கையான பொலிவை பெற விரும்பினால், சந்தனம் சிறந்த சாய்ஸ்.


சருமத்தை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள ரோஸ்வாட்டர் உதவியாக இருக்கும். இதை இரண்டையும் சேர்த்து டேன் நீக்க பேக்காக பயன்படுத்தலாம்.


குறிப்பு:


முகத்திற்கு ஃபேஸ் பேக் போடும்போது, உங்கள் முன்கழுத்து மற்றும் பின்கழுத்து பகுதிகளுக்கும் கவனம் செலுத்த வேண்டும்.


கோடை காலத்தில் அதிகமாக நீர் அருத்த வேண்டும். அப்போதுதான் சருமம் நீர் சத்துடனும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண