திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த தம்டகோடி கிராமத்தில் உள்ள திருமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பேராசிரியைக்கும் வேலூரை சேர்ந்த இளம் தொழில் அதிபருக்கும் இந்து கலாச்சார முறைப்படி திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வேலூரை சேர்ந்த சுந்தர்ராஜி-ரோஜா தம்பதியின் மூத்த மகன் கோபி (32) ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கும் ஜெர்மன் நாட்டில் அரசு கல்லூரியில் அரசு பேராசிரியையாக பணிபுரியும் ஐரீஸ் (27) ஆகிய இருவரும் ஒரே நகர்பகுதியை சேர்ந்தவர்கள். பின்னர் இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பின்னர் இவர்களுடைய இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது
இருவரின் காதலுக்கும் பெற்றோர்கள் ஒப்புதல் அளித்த நிலையில், மணப்பெண் ஜரீஸ் விருப்பபடி இந்து முறைப்படி திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள தம்மகோடி திருமலை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் இருவீட்டை சேர்ந்த உறவினர்களும் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்.
இதுகுறித்து மணமகள் ஐரிஸ் தெரிவிக்கையில், நமது உலகில் மிக முக்கியமானதாகவும் இந்திய கலாச்சாரமும் பண்பாடும் உலகிற்கே வழிகாட்டியாகும். இந்திய குடும்ப வாழ்க்கை முறை உலகிற்கு முன்னுதாரணமாகும். இந்தியாவில் குறிப்பாக தமிழ்கத்தின் குடும்ப நடத்தும் வாழ்க்கை முறையை நான் பார்த்துள்ளேன் அது எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் இந்திய உள்ள தமிழ்நாட்டின் மணமகனை விரும்பி திருமணம் செய்துகொண்டேன் என்றார்.