வாட்ஸ் அப் பே மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அதன் பயனர்களின் எண்ணிக்கையை 4 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்துவதறகு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் National Payments Corporation of India (NPCI) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் யு.பி.ஐ. மூலம் பணப் பரிவர்த்தனை வசதி அறிமுகம் செய்யப்பட்டதற்கு பின்பு, கூகுள் பே, ஃபோன் பே, மூலம் பணம் செலுத்துவது அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், பிரபல மெசேஜிங் அப் வாட்ச் ஆப், பணப்பரிவர்த்தை வசதியை அறிமுகம் செய்த பின், டிஜிட்டல் பேமண்ட்ஸ் பயன்பாடு மேலும் அதிகரித்தது.
இந்தியாவில் வாட்ஸ் அப் மூலம் பணம் பரிவர்த்தை மேற்கொள்ள ஏற்கனவே, 20 மில்லியன் அதவாது 2 கோடி பயனர்களுக்கு அனுமதிக்க யு.பி.ஐ. நிறுவனம் அனுமதி அளித்திருந்தது. நாட்டில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் விதமாக, வாட்ஸ் அப் பேமெண்டின் பயனர்கள் எண்ணிக்கையை 40 மில்லியனாக அதிகரித்திருந்தது.
தற்போது என்.சி.பி.ஐ. நிறுவனம் வாட்ஸ் அப் பே-இல் கூடுதலாக 60 மில்லியன் (6 கோடி) பயனர்களை அனுமதிக்கலாம் என தெரிவித்துள்ளது. இதன்மூலம், வாட்ஸ் அப் நிறுவனம் தனது பேமேண்ட்ஸ் வசதியின் மூலம் 100 மில்லியன் பயனர்களை, அதாவது 10 கோடி பயனர்களை அனுமதிக்க இருக்கிறது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம், யு.பி.ஐ. மூலம் 500 கோடி டிஜிட்டல் பேமெண்ட்ஸ் என்ற சாதனையை தொட்டது. இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்களை நிர்வகிக்கும் என்.சி.பி.ஐ.நிறுவனம் டிஜிட்டல் பேமெண்ட்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், நாட்டில் யு.பி.ஐ. மூலம் பணப்பரிவர்த்தைனை அதிகரிக்க, ரிசர்வ் வங்கி UPI123 Pay என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லாமல் சாதாரண ஃபோன்களின் மூலமும் யு.பி.ஐ.யை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதன்மூலம், யு.பி.ஐ. பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
தற்போது, வாட்ஸ்-அப் பேவிற்கு கிடைத்திருக்கும் 10 கோடி பயனர்கள் அனுமதி, டிஜிட்டல் பேமெண்ட்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்