முருங்கைக்கீரை ஊட்டச்சத்து நிறைந்தது என்பது நாம் அறிந்ததே. முருங்கை காய், கீரை, பூ என அனைத்தும் சத்தி நிறைந்தது. முருங்கைக்கீரையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி குடிப்பது நல்லது என்று ஊட்டச்சத்தி நிபுணர்கள் சொல்வதை காணலாம். 


பாலை விட கால்சியத்தின் அளவு முருங்கைக்கீரையில் அதிகம்; கேரட்டை விட வைட்டமின் ஏ பத்து மடங்கு அதிகமாக இருக்கிறது.  முருங்கைக்கீரை சாப்பிட்டால்  ஊட்டச்சத்து கிடைக்கும். இது வளர்சிதை மாற்றத்தை சீராக இயங்க உதவும். இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துதல், முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது,  கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். இளம் குழந்தைகள், கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளின் தாய்மார்கள் முருங்கைக்கீரை அடிக்கடி உணவில் எடுத்துகொள்வது மிகவும் நல்லது. 


முருங்கைக்கீரையில் ஆரஞ்சுப் பழத்தை விட ஏழு மடங்கு வைட்டமின் சி, தயிரைக் காட்டிலும் ஒன்பது மடங்கு புரதம், வாழைப்பழத்தை விட 15 மடங்கு பொட்டாசியம் மற்றும் 25 மடங்கு அதிக இரும்புச் சத்து இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறனர். அதோடு முருங்கைக்கீரையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கடி குடிப்பதில் உள்ள நன்மைகள் குறித்து நிபுணர்கள் சொல்வதை காணலாம். 


முருங்கைக் கீரை தண்ணீரின் நன்மைகள்:


முருங்கை மரத்திலிருந்து முருங்கை இலைகளை எடுத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிக்கடி அந்த தண்ணீரை குடிக்கலாம். இல்லையெனில், முருங்கைக்கீரையை நிழலில் காய வைத்து பொடியாக செய்து காற்றுப்புகாத டப்பாவில் வைக்கலாம்/ தேவைப்படும்போது, தண்ணீரில் ஒரு ஸ்பூன் முருங்கைக்கீரை பொடியை சேர்த்து கொதிக்கவிட்டு குடிக்கலாம். குறிப்பாக இதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். இதனால் பல்வேறு நோய்களும் ஊட்டச்சத்து குறைபாடுகளும் தவிர்க்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் சுஜாதா பரிந்துரைக்கிறார்.


வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ராகுல் தெரிவிக்கையில், “முருங்கைக்கீரை ஆண்டிஆக்ஸிடன்ட்டு நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ, சி, ஈ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் இருக்கிறது. ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் அல்லது வைட்டமின்கள் குறைபாடு, முடி உதிர்தல் ஆகிய பிரச்சனைகள் இருந்தால் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை தண்ணீர் குடித்துவந்தால் சரியாகிவிடும்.” என்று தெரிவித்தார்.


எலும்பு வலுப்பெறும்


எலும்பு ஆரோக்கியம் மேம்பட முருங்கைக்கீரை தண்ணீர் அருந்தி வரலாம். மூட்டு வலி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த உதவும். சரும பராமரிப்பு, முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் இதை தினமும் குடிக்கலாம். முருங்கைக்கீரையில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி,ஃபிளாவனாய்டுகள் இருப்பதால் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தொற்று நோய் பரவும் காலங்களிலும் இதை குடிப்பதால் நோய் எதிர்பு திறன் அதிகரிக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை தவிர்க்கும்.


வீகன், இறைச்சி சாப்பிடாதவர்கள் முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு மூன்று முறை உணவில் சேர்க்கலாம். இந்த முருங்கைக்கீரை தண்ணீரை தினமும் குடித்து வரலாம். 


வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்


முருங்கைக்கீரை தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது. இது உடல் எடையை நிர்வகிக்க உதவும். குடல் பாக்டீரியாக்களை ஆரோக்கியமாக வைக்க உதவும். இதனால் உடலுள்ள நச்சுக்கள் வெளியேறும். குறைந்த கலோரி கொண்டது என்பதால் உடல் எடை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்களும் இதை தாராளமாக சாப்பிடலாம். 


சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது


இது நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்தது. ஏனெனில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோய்க்கு முந்தைய அறிகுறிகள் இருப்பவர்களும் இதை அருந்தலாம். ஆனலால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை தண்ணீரை குடிக்க வேண்டும். 


சரும ஆரோக்கியம்


முருங்கைக்கீரை தண்ணீர் சருமத்திற்கு நல்லது. இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது
முருங்கையில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு சிறந்தது. இது முகப்பருவைக் குறைக்க உதவுகிறது. தோல் அமைப்புகளை மேம்படுத்துகிறது மற்றும் சருமத்திற்கு ஒரு பிரகாசமான தோற்றத்தை அளிக்கிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.  இது முடி உதிர்வைக் குறைக்கவும். உடலில் இரும்புச் சத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்த்துப் போராடுபவர்களுக்கும் அல்லது குறைந்த ஹீமோகுளோபின் அளவைக் கொண்டிருப்பவர்களுக்கும் இதை சாப்பிடுவதன் மூலம் உள்ளுறுப்புகள் சீராக இயங்கும். அது தோலின் பொலிவில் வெளிபடும்.


”முங்கைக்கீரையில் உள்ள இரும்புச்சத்து சிலருக்கு செரிமான பிரச்சனை எற்படலாம். அப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், முருங்கைக்கீரை தண்ணீரில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் அல்லது உணவுக்குப் பின் உட்கொள்ளலாம்."  என ஊட்டச்சத்து நிபுணர் சுஜாதா தெரிவித்தார்.


பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.