உடல் எடைடை குறைக்க திட்டம் இருப்பவர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர் ஆலன் சில அறிவுரைகளை வழங்குகிறார்.
தண்ணீர் குடிப்பது உதவுமா?
உடல் ஆரோக்கியமான இருக்க வேண்டும் என்றால் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவே உடல் பருமன் பாதிப்பு இருப்பவர்கள் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவகள் சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு க்ளாஸ் தண்ணீர் குடிப்பது பசியை குறைக்க உதவும் என்கிறார் நிபுணர். அதோடு மட்டும்மலாமல் இது அதிக கலோரி உணவு சாப்பிடுவதை தடுக்கும்.
இது ஒரு ட்ரிக் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஆலன். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,” உணவு சாப்பிடுவதற்க் அரை மணி நேரம் முன்பு இரண்டு டம்பளர் தண்ணீர் குடிப்பது அதிகமாக சாப்பிடாமல் இருக்க உதவும். குறிப்பாக, இரவு உணவு சாப்பிடுவதற்கு முன்பு இதை பின்பற்றுவது நன்று.” என்று தெரிவிக்கிறார்.
செரிமான பிரச்சனை ஏற்படுமா?
சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் செரிமான மண்டலத்தில் உள்ள என்சைம்களின் சமநிலை பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், அப்படி செய்வது சரியா என்ற கேள்விக்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலன் தெரிவிக்கையில்,” சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடிப்பதால் செரிமான பாதிக்கப்படும் என்று சொல்லப்படுவது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டவை இல்லை. அது செரிமான மண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், உணவு சாப்பிடுவதற்கு முன்பு சூப் குடித்தால் அது அதிக உணவு சாப்பிடுவதை தடுக்கும். அந்த லாஜிக்தான் இரண்டு டம்பளர் தண்ணீர் குடிக்கும் முறையும்.” என்று விளக்கம் அளித்தார்.
தண்ணீர் மேஜிக் உடல் எடையை குறைக்க உதவுமா?
சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு டம்பளர் தண்ணீர் குடிப்பது அதிக கலோரி சாப்பிடாமல் இருக்க தடுக்கும். இது உடல் எடையை நிர்வகிக்க, கட்டுக்குள் வைக்க உதவும். அதிகமாக உணவு சாப்பிடாவிட்டால் உடல் எடை குறைக்கும் பயணத்திற்கு உதவியாகதானே இருக்கும். ஆனால், இதுமட்டும் உடல் எடையை குறைக்க உதவாது. சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி முக்கியம். அதோடு, எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பதும் அவசியம் என்று பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.
பிடித்த உணவுகளை தவிர்த்து கஷ்டப்பட்டு சிலவற்றை சாப்பிட முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நெய், வெண்ணெய் போன்ற உணவுகளில் அதிக கொழுப்பு இருக்கிறது என்று சிலர் டயட்டில் அதை தவிர்த்துவிடுவர். ஆனால், இவற்றில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. அளவோடு சாப்பிடலாம். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு, துரித உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை ஆகிய ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தவிர்க்கவும்.
இஞ்சி செரிமான மண்டலம் சீராக இயங்க உதவும். குடல் ஆரோக்கியமாக இருந்தாலே உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும். ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படும். ஒரு சிறிய துண்டு அளவில் இஞ்சி சாப்பிடுவது கபத்தை சீராக இருக்க உதவும். அதோடு மட்டும் இல்லாமல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.
பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.