ஒரு க்ளாக்ஸ் பாலில் எவ்வளவு கால்சியம் இருக்கு?-ன்னு கணக்கிட வேண்டாம். ஆனால், பாலிலிருந்து கிடைக்கும் கால்சியம் சத்திற்கு மாற்றாக மற்ற உணவு பொருட்களில் இருந்து கால்சியம் சத்து பெறுவது எப்படி என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.
ஒரு க்ளாக் பால் இல்லாமல் வேறு எந்த உணவு பொருளில் இருந்து கால்சியம் எடுத்துகொளவ்து என்பது எல்லாருக்கும் புதிராக இருக்கும். சிலருக்கு பாலில் உள்ள லாக்டோஸ் ஒவ்வாமையை ஏற்படுத்துவதாக இருக்கும். அப்படி இருப்பவர்களுக்கு கால்சியம் சத்து எதிலிருந்து பெறலாம் என்ற கேள்வி இருக்கும்.
உடலுக்கு கால்சியம் ஏன் முக்கியம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் Varsha Gorey தெரிவிக்கையில்,” எலும்பு, பல் ஆரோக்கியம், நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி உதவுவது, இரத்தம் உறையாமை உள்ளிட்ட பலவற்றிற்கு கால்சியம் அவசியமாக இருக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை, பதின்பருவம், பெரியவர்கள் என ஓவ்வொருவருக்கும் தனித்தனியே கால்சியம் தேவைப்படும் அளவு மாறுபடும். தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு கால்சியம் உடலுக்கு தேவை. சராசரியாக எல்லா வயதினருக்கும் 1000- 1300 மி.கி. வரை கால்சியம் தேவை. ஒரு கப் பாலில் 300 மி.கி. கால்சியம் இருக்கிறது. அதோடு, கால்சியம் உடலில் அப்சர்வ் செய்ய வைட்டமின் டி-யின் அளவும் மிகவும் அவசியமாகிறது. தினமும் கால்சியம் எடுத்துகொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் தடுக்க உதவும். பெண்களிடம் இந்தப் பிரச்னை அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு கால்சியம் கிடைக்க உட்கொள்ள வேண்டிய உணவுகள்
- பால் பொருட்களில் இருந்து மட்டுமே கால்சியம் கிடைப்பது அதிகம் என்றில்லை.. அதை தவிர்க்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும் மாற்று இப்போது இருக்கிறது.
- kale கீரை, collard greens, and bok choy, as well as fortified orange juice, ட்ரை ஆப்ரிகாட், டோஃபு ஆகியவற்றிலும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
- சில வகையான மீன்களில் கால்சியம் அதிகம் இருக்கிறது.
சோய் பால்
பால் மற்றும் அது சார்ந்த பொருளுக்கான அலர்ஜி இருக்கும் பட்சத்தில், சோய் பால் குடிக்கலாம். கால்சியம் மட்டும் அல்லாது, வைட்டமின் டி மற்றும் புரதச் சத்து நிறைந்த பால் இது.
பாதாம்
ஒரு கப் பாதாம் 385 மில்லிகிராம் அளவு கால்சியத்தைக் கொண்டுள்ளது. நமது உடலுக்குத் தேவையான கால்சியத்தில் மூன்றில் ஒரு பங்கு இது.
டோஃபூ
குறைந்த அளவு கொழுப்பு சத்து உள்ள, புரதச் சத்து நிறைந்த டோஃபூ கால்சியத்திற்கான உணவு பொருள். ஆயினும், வெவ்வேறு பிராண்டுகளில் கால்சியம் அளவு வகைப்படும். நமக்குத் தேவையான டோஃபூவைப் பார்த்து, லேபிளைப் படித்து வாங்குவது நல்லது.
கொண்டைக்கடலை
இந்த கடலை எல்லா சத்துகளின் இருப்பிடம் என்று சொல்லலாம். நார்ச்சத்து மற்றும் பிற உயிர்ச் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள் இது. வீகன் உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ள அனைவரும் கால்சியதிற்கான தேவையை இதில் நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஒரு கப் கொண்டைகடலையில் 75 மில்லிகிராமிற்கும் அதிகமான கால்சியம் உள்ளது.
வைட்டமின் டி போதுமான அளவு கிடைப்பதையும் உறுதி செய்யவும்.