இரவில் தூங்கப் போகும்போது ப்ரா அணிய வேண்டாம் என்று பலர் உங்களுக்கு எச்சரித்திருப்பார்கள். இரவில் ப்ரா அணிந்து தூங்குவது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்றும், இரவில் ப்ரா அணிவது மார்பக புற்றுநோய்க்கும் மார்பக வளர்ச்சியையும் கட்டுப்படுத்தக்கூடும் என்று பலரும் நம்புகிறார்கள்.


இது குறித்து மார்பகப் புற்றுநோய் அறுவைசிகிச்சை மருத்துவரின் கருத்தைக் கேட்டறிந்தோம். அவரின் கூற்றுப்படி, நாம் ப்ராவை அகற்றாமல் இரவில் தூங்குவது நமது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை மருத்துவப்பூர்வமாக நிரூபிக்கும் சரியான ஆராய்ச்சி எதுவும் தற்போது வரை மேற்கொள்ளப்படவில்லை.


படுக்கைக்குச் செல்லும்போது ப்ரா அணிவது மார்பக புற்றுநோயை மற்றும் பிற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்கும் வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்கிறார் மருத்துவர்.அதனால் இரவில் பெண்கள் ப்ரா அணிந்து தூங்கலாம் என அறிவுறுத்துகிறார் அவர். 


ஒருவேளை ப்ரா அணிந்து தூங்குவது நமக்குச் சங்கடமாக இருந்தால் அதற்கு ஏற்றபடி மெல்லிய துணியிலான ப்ராவை அணியப் பரிந்துரைக்கிறார், மெல்லிய ப்ரா அணிவது நல்ல இரவுத் தூக்கத்தைத் தரும். கனமான மார்பகங்களைக் கொண்ட பெண்கள் ப்ரா அணிந்து உறங்கச் செல்வது அவர்களுக்கு சங்கடமான உணர்வைத் தராமல் இருக்கும் என்கிறார் அவர்.


நமக்கு ஏதுவான ப்ராவை தேர்ந்தெடுப்பது எப்படி? 


வசதியாக இருக்க வேண்டும்: கவர்ச்சியான உள்ளாடைகள் ஆன்லைனில் அதிகம் கிடைக்கின்றன. அவை விலை அதிகமும் கூட, ஆனால் கவர்ச்சியாக இருக்கிறதா என்பதை விட ப்ரா வசதியாக இருக்கிறதா இல்லையா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். ப்ரா  உடல்-இறுகியபடி இருக்கக் கூடாது.அதே சமயம் அது மிகவும் தளர்வாகவும் இருக்கக்கூடாது. அது நன்கு பொருத்தமாக இருக்க வேண்டும். இறுக்கமான பட்டைகள் கொண்ட ப்ராக்கள் தடிப்புகளுக்கு வழிவகுக்கும், மேலும் அரிப்பு ஏற்படலாம். நீங்கள் வாங்கும் உள்ளாடைகள் மென்மையான துணியிலிருந்து தயாரிக்கப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.


எப்போது தவிர்க்க வேண்டும்: உங்கள் மார்பகங்களை வடிவில் வைத்திருக்கவும், உங்கள் மார்பகங்களுக்கு அருகில் வீக்கம், தடிப்புகள், சீழ், தொற்று அல்லது சீழ் ஆகியவற்றைக் கவனித்தால், அவற்றை தொய்வதைத் தடுக்க பிரா அணிவது அவசியம். இருப்பினும் அந்த சமயத்தில் அவற்றை அணியக்கூடாது. எரிச்சல் குறையும் வரை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ப்ரா அணிவதைத் தவிர்க்கவும்.வெளியே செல்ல ப்ரா அணிய வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு இருந்தால் உங்கள் சருமத்துக்கு உகந்த மெல்லிய ப்ரா அணிந்து செல்லலாம்.


உடற்பயிற்சி: 


நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்பவர் என்றால் ப்ரா அணிவது குறிப்பாக ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிவது பரிந்துரைக்கப்படுகிறது. சைக்கிளிங், ஜிம் என உடற்பயிற்சியின்போது மார்பகங்களின் சதை இழுபட வாய்ப்புள்ளது அதனைத் தவிர்க்க ப்ரா உதவுகிறது.