முடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும், நீளமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க நம்மில் பலர் பல முயற்சிகளை கையாளுவது வழக்கம். சிலர் இதற்காக விலை உயர்ந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷ்னரை நாடுவார்கள். இன்னும் சிலர் முற்றிலும் இயற்கையை நம்பியே களமிறங்குவார்கள்.  ஆனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு சில டெக்டிக் இங்கு ட்ரெண்டாவது வழக்கம் . அப்படியான  ஒரு முறைதான் இப்போது இளம்பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் reverse hair washing முறை .  அதாவது தழைகீழாக தலையை சுத்தம் செய்யும் முறை என்பதைத்தான் இந்த வீடியோவில் நாம்  பார்க்க இருக்கிறோம்.



reverse hair washing முறை என்றால் என்ன ?


பொதுவாக நாம் அனைவருமே தலை குளிப்பதற்கு முன்னால் , முதலில் ஷாம்பூவை தேய்த்துக்கொண்டு பின்னர் கண்டிஷ்னரை பயன்படுத்துவோம்.  ஆனால் reverse hair washing முறையில் முதலில் கண்டிஷ்னரை தேய்த்துவிட்டு , பின்னர் ஷாம்பூவை தேய்க்க வேண்டும்.  டாக்டர் நூபூர் ஜெயின், எம்.டி டெர்மட்டாலஜி இது குறித்து கூறுகையில்  “ ஷாம்பு அதிகப்படியான எண்ணெய், இறந்த சரும செல்கள், வியர்வை, அழுக்கு ஆகியவற்றைக் நீக்க உதவுகிறது.  ஆனால் கண்டிஷனர் நீரேற்றத்திற்கானது. இது முடிக்கு ஊட்டச்சத்தை அளிக்க உதவுகிறது. எனவே முதலில் கண்டிஷ்னரை பயன்படுத்துவது முடிக்கு பளபளப்பையும் மென்மையையும் கொடுக்கும் “ என்கிறார்.


 





நன்மைகள் :



எண்ணெய் பசையை போக்க உதவும்


உங்களுக்கு எண்ணெய் பசையுள்ள உச்சந்தலையில் இருந்தால் அல்லது கண்டிஷனிங் செய்த பிறகு உங்கள் தலைமுடி க்ரீஸாக உணர்ந்தால் இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள் .



இது உங்கள் தலைமுடியை ரசாயனங்களிலிருந்து பாதுகாக்கும்


. ஷாம்பு அதிகப்படியான எண்ணெய்களை முடியை அகற்றுவதால், அது இயற்கையான அத்தியாவசிய எண்ணெய்களையும் அகற்றும், ஆனால் அதற்கு முன் கண்டிஷனரை லேயராக வைத்திருப்பது அதன் சாத்தியக்கூறுகளைக் குறைக்கும் மற்றும் ஷாம்புவில் உள்ள ரசாயனங்களிலிருந்து உங்கள் தலைமுடியைப் பாதுகாக்கும் என கூறப்படுகிறது.


புத்துயிர் கிடைக்கும் :


மந்தமான மற்றும் உயிரற்ற கூந்தலுடன் போராடும் எவரும்  ரிவர்ஸ் முறையை முயற்சிக்க வேண்டும். இந்த செயல்முறை உங்கள் முடிக்கு ஒரு புதிய பிரகாசத்தை கொடுக்கலாம்.







ரிவர்ஸ் ஹேர்வாஷ் செய்வது எப்படி ?



முதலில், உங்கள் தலைமுடியை ஈரப்படுத்தி, கண்டிஷனரைத் தடவி, நன்கு மசாஜ் செய்து 5-10 நிமிடங்கள் ஊர வைக்கவும். கண்டிஷனரின் அடுக்குக்கு மேல், ஷாம்பூவைத் தடவி, இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கழுவவும்.



எல்லா வகை கூந்தலுக்கும் பலன் தருமா ?


தழைகீழ் முறையில் குளிப்பது என்பது அனைவருக்கும் பொருந்தாது என்றாலும், ஷாம்புக்கு முன் கண்டிஷனரைப் பயன்படுத்துவதன் மூலம் ஸ்கால்ப்பிற்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று ஸ்கின்செஸ்ட்டின் நிறுவனர் மற்றும் ஆலோசகர் தோல் மருத்துவரான டாக்டர் ஜெயின் கூறுகிறார். மேலும் இது மெல்லிய மற்றும் எண்ணெய் பசை கொண்ட கூந்தலுக்கு மிகச்சிறந்த பலனளிக்கும் என்கிறார் அவர்.