சமந்தாவிற்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. தமிழ், தெலுங்கு இன்னும் பிற மொழிகளில் படுபிஸியாக இருக்கும் ஹீரோயின். சமந்தாவின் இந்த வெற்றி, அவருக்கு தாமதமாக கிடைத்தாலும், அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. நாகசைத்தன்யா உடனான காதல் திருமணம், சில ஆண்டுகளில் திருமண முறிவு, சர்சைகள், விமர்சனங்கள் என அடுத்தடுத்து பல்வேறு சிக்கலில் சிக்கினாலும், சமந்தா, இன்னும் இந்த மார்க்கெட்டில் முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார். 


சமந்தாவின் சொந்த வாழ்கையை நினைத்து சமீபத்தில் அவரது தந்தை ஒரு போஸ்ட் போட, அது அவரின் வலியையும் வேதனையையும் குறித்தது. ஆனாலும் இவை எதையும் கண்டுகொள்ளாமல், தன் பணியில் தீவிரமாகவும், உண்மையாகவும் உழைத்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. 


சமந்தாவுக்கு ஒரு பிரச்சனை மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அது, சரும பிரச்னை. சருமத்தின் பிரச்னையால் அவர் அடிக்கடி சிரமப்படுவதும், அதற்காக சிகிச்சை எடுப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அமெரிக்கா சென்ற நிலையில், அது அவரது சருமம் தொடர்பான சிகிச்சைக்கு என்பது தெரியவந்தது. தனது சமூக வலைதள பக்களில் அமைதி காத்து வந்த சமந்தா, சிகிச்சை முடித்து தற்போது மும்பை திரும்பியதாக கூறப்படுகிறது. 






இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவு செய்துள்ளார். அதில், அவர் முகத்தை அவர் காட்டவில்லை. சிகிச்சையில் இருப்பதாலேயே அவரது முகத்தை அவர் காட்டவில்லை எனத்தெரிகிறது. அதே நேரத்தில் அவரது அணிந்திருக்கும் டீசர்ட்டை மட்டும் குளோஸ்அப்பில் காட்டியுள்ளார். 


அதில், 


‛‛நீங்களும் இதை கேட்க வேண்டும் என்றால்.. நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டீர்கள்’’


என்று அந்த பதிவில், சமந்தா கேப்ஷன் ஒன்றை எழுதியிருந்தார். மூன்று நாட்களாக அவரது முகத்தை காணாமல் காத்திருந்த ரசிகர்கள், இந்த பதிவை கண்டதும் குஷியாகிவிட்டனர். அதுமட்டுமின்றி, அதே டீசர்டில் LFC லோகோ இருந்தது. உடனே நீங்கள் Liverpool FC ஆ என்று கேட்டு, அதையும் ஒரு தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண