தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கை நேற்று வெளியானது. இந்த அறிக்கையில், நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புள்ளி விவரங்களுடன் விவரமாக கூறியுள்ளனர்.
இந்த அறிக்கையில் 2010ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையையும், கடந்தாண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கை வரை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நீட் தேர்வுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பின்வருமாறு:
நீட் தேர்வுக்கு முன்பு நடைபெற்ற மாணவர் சேர்க்கை :
2010- 2011 :
ஆங்கில வழி மாணவர்கள் – 80.2 சதவீதம்
தமிழ் வழி மாணவர்கள் – 19.79 சதவீதம்
2011-2012 :
ஆங்கில வழி மாணவர்கள் – 81.95 சதவீதம்
தமிழ் வழி மாணவர்கள் - 18.05 சதவீதம்
2012-2013
ஆங்கில வழி மாணவர்கள் - 54.56 சதவீதம்
தமிழ் வழி மாணவர்கள் - 14.48 சதவீதம்
2013- 2014
ஆங்கில வழி மாணவர்கள் - 81.42 சதவீதம்
தமிழ் வழி மாணவர்கள் - 18.58 சதவீதம்
2014-2015
ஆங்கில வழி மாணவர்கள் - 82.55 சதவீதம்
தமிழ்வழி மாணவர்கள் - 17.45 சதவீதம்
2015-2016
ஆங்கில வழி மாணவர்கள் - 83.05 சதவீதம்
தமிழ்வழி மாணவர்கள் - 16.94 சதவீதம்
2016-2017
ஆங்கில வழி மாணவர்கள் – 85.12 சதவீதம்
தமிழ் வழி மாணவர்கள் - 14.88 சதவீதம்
நீட் தேர்வுக்கு பின்பு மாணவர் சேர்க்கை :
தமிழ்நாட்டில் 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு பின்பு தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பின்வருமாறு:
2017 – 2018 :
ஆங்கில வழி மாணவர்கள் – 98.41 சதவீதம்
தமிழ்வழி மாணவர்கள் - 1.6 சதவீதம்
2018-2019
ஆங்கில வழி மாணவர்கள் – 98.41 சதவீதம்
தமிழ்வழி மாணவர்கள் - 3.27 சதவீதம்
2019-2020
ஆங்கில வழி மாணவர்கள் – 98.31 சதவீதம்
தமிழ்வழி மாணவர்கள் - 1.38 சதவீதம்
2020 -2021:
ஆங்கில வழி மாணவர்கள் – 98.01 சதவீதம்
தமிழ்வழி மாணவர்கள் - 1.99 சதவீதம்