Navratri 2022: இந்தியாவில் கொண்டாடப்படும் மிக  பிரபலமான பண்டிகைகளில், நவராத்திரி பண்டிகையும் ஒன்றாகும். இந்த நவராத்திரி ஆனது ஒன்பது இரவுகள்’ என்று பொருள்படும். துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி வடிவங்களில் தெய்வீக வழிபாட்டை ஒவ்வொரு மூன்று நாட்களும் வழிபடுகிறார்கள்.


இருப்பினும், பத்தாவது நாள் மிக முக்கியமான நாளாகும். இது ‘வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. இது விஜயதாசமி என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மற்ற பண்டிகைகளைப் போலவே, நவராத்திரியும் திருவிழா கொண்டாடுவதற்கும் பல கொள்கைகள் இருக்கிறது. ஒரு விதத்தில் , நவராத்திரி திருவிழா கொண்டாடுவதால் நம் ஆன்மீக ஆற்றல்கள் வெளிப்படுகிறது.


நம் ஆன்மிக பயணத்தில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரின் கோட்பாடுகளை நாம் கடந்து செல்கிறோம்.அதாவது கல்வி,செல்வம்,வீரம் இவை மூன்றும் அனைவரின் வாழ்விலும் மிக முக்கியமான விஷயமாகும்.இந்த உலகில் ஒருவரின்  சுயத்தை உணர இது அவசியம் தேவைப்படுகிறது.இந்த காலகட்டத்தில் மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரிக்க விரும்புகிறார்கள். அவர்கள் பண்டிகைக் காலத்திற்கு தயாராக இருக்கிறார்கள். வீடுகளில் செய்யப்படும் கைவினைப் பொருட்களைக் கொண்டு இந்த நவராத்திரியை சிறக்க செய்வோம்.
 
 ஆர்கானிக் மண் விளக்குகள் :


திருவிழா நாட்களில் வீடுகளின் பூஜையறை மற்றும் வாசல் மொட்டை மாடி நமக்கு பிடித்த இடங்களில், உங்கள் வீட்டிற்கு மென்மையான ஒளியைக் கொடுக்கும் மண் விளக்குகளை நாம் தேர்வு செய்து வைக்கலாம். உங்கள் விளக்குகள் நன்றாக எரிய மற்றும்,நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் அமர்ந்து நச்சுத்தன்மையற்ற கலர் பொடிகளை முகத்தில் பூசிக்கொண்டு பண்டிகை கொண்டாடலாம்.


சுவர் மற்றும் கூரைகளில் தொங்கவிடப்படும் வண்ண பேப்பர் டிசைன்கள் :


உங்கள் வீடுகளை அழகாக்கவும் புதிய கலர் வண்ணங்கள் அடித்து வண்ணமயமாக்கவும்  இது ஒரு மிகச் சிறந்த நேரம். குறைந்த முயற்சியில் வண்ணமயமான காகிதங்களை உங்கள் வீட்டில் தொங்கும் மற்றும் தொங்கல்களாக அலங்காரம் செய்ய வேண்டும். வீட்டின் ஒட்டுமொத்த கருப்பொருளுடன் வண்ணங்கள் செய்வதை உறுதிப்படுத்துங்கள்.


மலர்களைப் பயன்படுத்துங்கள் :


உங்களது வீட்டில்  உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் இருக்கும் பிளாஸ்டிக் பூக்களை தூக்கிப் போட்டுவிட்டு,  செம்பருத்தி மற்றும் சாமந்தி போன்ற பூக்களை வீட்டிற்கு அலங்காரம் செய்யுங்கள். இவைகள் வீட்டிற்கு நல்ல மனங்களை தரும். பண்டிகை காலங்களில் உங்கள் வீடு பார்ப்பதற்கு மிக அழகாகவும் நல்ல நறுமணமாகவும் இருக்கும். இது ஒரு நல்ல பண்டிகையாக இருக்க மலர்களும் ஒரு காரணம்.


ஒரு ரங்கோலி  :


பண்டிகை காலங்களில் வீடுகளில் கோலம் போடுவது என்பது மிகவும் முக்கியமானகொண்டாட்டங்களில் ஒன்று.பல வண்ணங்களில் உங்கள் வீட்டு முன் கோலம் போடுவதால் உங்க வீட்டின் முன் பகுதி மிகவும் அழகாக தோற்றம் அளித்து வீட்டு வழியில் செல்பவர்களை கவரக்கூடிய ஒன்றாகும். இயற்கை வண்ணங்களை பயன்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நவராத்திரி என்ற இதுபோன்று பல முறைகளில் உங்களது பண்டிகையை கொண்டாடுங்கள். இதனால் உங்கள் குடும்பமும் அந்த பண்டிகையும் மிகச் சிறப்பாக உங்களுக்கு இருக்கும். மற்றும் இயற்கை முறையில் கொண்டாடுவது உங்களது மனதிற்கு நல்ல நிம்மதியும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.