நாள்: 19.09.2022


நல்ல நேரம் :


காலை 06.15 மணி முதல் காலை 07.15 மணி வரை


மாலை 04.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை



கௌரி நல்ல நேரம் :


காலை 09.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 07.30 மணி முதல் மாலை 08.30 மணி வரை


இராகு :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


குளிகை :


மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


சூலம் – கிழக்கு


மேஷம்: 


திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.


ரிஷபம்:


குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஆதரவு உண்டாகும். பழைய கடனை திரும்ப பெறுவதற்கான சூழல் அமையும். பொன், பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பேச்சுத்திறமைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரம் ரீதியான பயணங்களால் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். 


மிதுனம்: 


சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் உண்டாகும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். 


கடகம்:


செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உலகியல் வாழ்க்கையை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். 


சிம்மம்:


வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பும், மகிழ்ச்சியான செய்தியும் கிடைக்கப் பெறுவீர்கள்.


கன்னி:


மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மாணவர்களுக்கு கல்வியில் புரிதலும், தெளிவும் ஏற்படும். வர்த்தக பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். 


துலாம்:


வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.


விருச்சிகம்:


பணி நிமிர்த்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். உடலளவில் மந்தத்தன்மையும், சோர்வும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் முடிவு எடுக்கவும்.


தனுசு:


வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பணிகளில் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் உதவி கிடைக்கும். உறவினர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். 


மகரம்:


நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வீடு, வாகனத்தை சீர் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். எதிர்பாலின மக்களால் சாதகமான சூழல் அமையும்.


கும்பம்:


மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும்.


மீனம்:


விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தனவரவு தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.