நமது சருமத்திற்கு எலாஸ்டிசிட்டி தன்மை உண்டு. அதனால் உடல் பருமன் ஏற்படும் போதும், உடல் எடை குறையும் போதும் தோலில் இழுவைத் தன்மையால் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படுகின்றன. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் பிரசவத்திற்குப் பின்னர் ஏற்பட்டுவிடுகிறது. இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் பெண்களுக்கு பெரிய கவலையைத் தந்துவிடுகிறது. காரணம் லோ ஹிப்பில் சேலையோ இல்லை க்ராப் டாப்போ விரும்பிய உடையோ அணிய முடியவில்லை என்ற வருத்தம் தான். அதுபோல் டயட், உடற்பயிற்சி செய்து உடலைக் குறைத்தும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை மறைக்க முடியவில்லையே என்று வருந்தும் ஆண்களும் உண்டு.
ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் க்ரீம் என்று சந்தையில் ஆயிரமாயிரம் ப்ராடக்ட்ஸ் கிடைக்கின்றன. ஆனால் அத்தனையும் தீர்வு தருகின்றனவா என்றால் இல்லை. அதனால் பர்ஸை பதம் பார்க்காமல் வீட்டிலேயே எப்படி ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை சரிசெய்வது என்பது பற்றி பார்ப்போம். இதனால் சந்தையில் அதிக ரசாயனப் பொருளுடன் கிடைக்கும் களிம்புகளைத் தவிர்த்து பலனைப் பெறலாம். ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை முழுமையாக சரி செய்ய முடியாது. ஆனால் அவற்றின் தடிப்பு துருத்திக் கொண்டு தெரியாமல் மட்டுப்படுத்தலாம். இதனால் உற்று நோக்கினால் மட்டுமே அவ்வாறான ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் தெரியும்.
கற்றாழை:
கற்றாழை எளிமையான தீர்வு தரும் சிறந்த மருந்து. அதில் உள்ள சத்துக்கள் தீக்காயங்கள், தழும்புகள், ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை குணமாக்குகிறது. சேதமடைந்த தோல் திசுக்களை சரி செய்து ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை கற்றாழை சரி செய்கிறது. கற்றாழை கூழை ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உள்ள பகுதியில் தேய்த்து 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர் அதனை வெதுவெதுப்பான தண்ணீரில் முக்கிய துணியைக் கொண்டு துடைத்தெடுக்கவும். இதனை அன்றாடம் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிட்டும்.
சர்க்கரைத் துகள்கள்:
சர்க்கரைத் துகள்கள் உயிர்நீத்த திசுக்களை அப்புறப்படுத்து ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை சரி செய்கிறது. சர்க்கரை சுற்றுப்புறத்தில் உள்ள ஈரப்பதத்தை ஈர்க்கும். அதனாலேயே இது மிதமான ஸ்க்ரப்பராக அறியப்படுகிறது. இதை எப்படி செய்ய வேண்டும் எனக் கேட்கிறீர்களா? ஒரு சிறிய கோப்பையில் சர்க்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை கப் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். தேங்காய் எண்ணெய்யில் உள்ள மாய்ஸ்சரைசர் தண்மை சருமத்தின் எலாஸ்டிசிட்டி தன்மையைக் கூட்டி அதை வலுப்படுத்துகிறது.
எலுமிச்சை:
இதுவும் எளித்தில் வீட்டிலேயே செய்யக் கூடியது தான். அரை எலுமிச்சையை எடுத்து அதிலிருந்து சாறு பிழிந்து கொள்ளுங்கள் அதை ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உள்ள பகுதியில் வைத்துத் தேய்க்கவும். இதனை 10 முதல் 15 நிமிடங்களுக்கு செய்யுங்கள். வட்ட வடிவ சுழற்சியில் தேய்த்துவிடுங்கள். வாரத்தில் இரண்டு முறையாவது இதனைச் செய்யுங்கள்.
முட்டை: முட்டையில் உள்ள புரதம் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை தீர்ப்பதில் சிறந்த பொருள். முட்டையில் உள்ள அமினோ அமிலங்கள் சேதமடைந்த சருமத்தை சரி செய்யும். 2 முட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அதிலிருந்து வெள்ளைக்கருவை மட்டும் பிரித்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு வைட்டமின் இ மாத்திரைகளைப் போடுங்கள். இதை வாரம் இருமுறை பயன்படுத்தி வாருங்கள்.