IPL 2023 Auction: 2023 ஆம் ஆண்டு ஐபிஎல்லுக்கான மினி அக்கேஷன் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம் குடிகொண்டு விடுகிறது. தங்களின் விருப்ப அணி களத்தில் விளையாடும் போது மட்டும் இல்லாமல், அணிகளுக்கு வீரர்களை ஏலம் எடுக்கும் போதும் பெரும் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் அக்கேஷனில் தங்களின் விருப்ப அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி, அணியை பல போட்டிகளில் வெற்றிபெறச் செய்த வீரர்கள் மற்றொரு அணிக்காக விளையாடப்போகிறர் என்பதை ரசிகர்களால் தாங்கவே முடியவில்லை. குறிப்பாக  தென் ஆப்பிரிக்காவின் ஃபாஃப் டூபிளிசிஸ் சென்னை அணியில் இருந்து பெங்களூரு அணிக்குச் சென்றபோது ரசிகர்கள் வெளிப்படுத்திய ஆதங்கம் என்பது பெரும் கவனத்தினை ஏற்படுத்தியது. 






அதேநேரத்தில், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த மினி அக்கேஷன் என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறக்கூடியது. இந்த மினி அக்கேஷனில் ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களது அணியில் மிகவும் மோசமாக விளையாடும் வீரர்களை விடுத்துவிட்டு அவரை எந்த விலைக்கு வாங்கினார்களோ அந்த விலைக்கு மற்றொரு வீரரை தங்களது அணிக்காக எடுத்துக் கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல், அணிக்காக ஒதுக்கப்பட்ட மொத்த ஏலத்தொகையினை கொண்டு பிக் அக்கேஷனில் ஏலம் எடுக்கப்பட்ட தொகையில் மீதம் உள்ள தொகையினைக் கொண்டும் இந்த ஏலத்தில் வீரர்களை எடுக்கலாம். மேலும் இந்த ஆண்டு பிசிசிஐ ஒவ்வொரு அணிக்கும் ஏலத்தொகையில் ஐந்து கோடி ரூபாய் உயர்த்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் 95 கோடி ரூபாய் வரை ஒட்டுமொத்தமாக அணிக்கு வீரர்களை ஏலம் எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. 


இது மட்டும் இல்லாமல் பிக் அக்கேஷனில் பங்கேற்காத வீரர்கள் தங்களின் பெயரை அக்கேஷனில் பதிவு செய்தும் இந்த அக்கேஷனில் கலந்து கொள்ளலாம். அதேபோல் ஒரு அணியில் இருக்க கூடிய வீரரும் இந்த அக்கேஷனில் பங்கேற்கலாம். 






இந்த மினி அக்கேஷன் டிசம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறவுள்ளது. 16ம் தேதி மதியம் அல்லது ஒருநாள் முழுவதும் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த மினி அக்கேஷனில் ஒரு அணியில் புதிதாக இணையும் வீரர்களால் அணியின் பலம் பலமடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதனை மனதில் கொண்டு தான் ஒவ்வொரு அணியும் தங்களின் அணிக்கு பலம் சேர்க்கும் வீரர்களை விலைக்கு வாங்குகிறர்கள். தற்போது, மும்பை அணி இதற்கு முன்னர் சென்னை அணியில் விளையாடிய இளம் வீரர் சாம் கரனை தங்களது அணிக்கு எடுக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது.