தீபாவளி வந்தாச்சு. நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகளைகளில் ‘தீபாவளியும்’ (Diwali) ஒன்று. தீபாவளி நாளில் குடும்பத்தினர், நண்பர்களுடன் பட்டாசு வெடித்து, இனிப்பு, உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வர். தீபாவளி என்ற நன்மையான நாளில் எல்லா வளமும் கிடைக்க வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்யப்படுவதும் உண்டு. இந்திய கலாச்சாரம் என்பது பல்வேறு பண்டிகைகள் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்தாண்டு தீபாவளி(Diwali 2024 Date) அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பண்டிகை தினத்தன்று பொதுவிடுமுறை அளிக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் தீபாவளி விரதம் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இருக்கிறது.
தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது?
தீபாவளி கொணடாடப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சத்தியபாமா நரகாசூரனை வதம் செய்ததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வட இந்தியாவில் வனவாசம் சென்ற ராமர் தனது வனவாசத்தை முடித்துக் கொண்டு மீண்டும் அயோத்திக்கு திரும்பிய நாளாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளி விரதம்
தீபாவளி நாளில் லட்சுமியை வணங்கி விரதம் இருப்பது எல்லா நலன்களையும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. காலையில் எழுந்து குளித்து விரதம் இருந்து, சிறப்பு பூஜை செய்யலாம்.
தீபாவளி பண்டிகையின்போது நண்பர்கள், சொந்தங்களுக்கு வாழ்த்து சொல்ல சில செய்திகள் கீழே கொடுகக்ப்பட்டுள்ளன.
- வாழ்வில் எப்போதும் சிரிப்பு நிலைத்திருக்கட்டும். இந்த தீபாவளி நாள் சிறப்பாக ஒளிரட்டும்.
- இனிய நாளாய் அமையட்டும். தீபாவளி வாழ்த்துகள்.
- தீபங்கள் உங்கள் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் நல்ல வழியை அமைக்கட்டும். இனிய தீபாவளி நல்வாத்துகள்.
- வாழ்வில் அமையும் மகிழ்ச்சியும் பரவட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்.
- தீபாவளி நல்ல ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் உங்களுக்கு அளிக்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
- இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்..
- மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்
தீபாவளி நன்னாள் வாழ்வில் நன்மைகள் நிறைந்திருக்க இறைவன் அருள் புரியட்டும். - தீபாவளி நாளில் நீங்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையட்டும்.
- தீபாவளி நாளில் அறியாமை விலகட்டும்.
- வாழ்வும் இனிக்கட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்..
- தீபாவளி நாளில் இறைவன் அருள் கிடைக்கடும். தீபாவளி நல்வாழ்த்துகள்.
- எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதை மட்டும் சிந்திக்க வாழ்த்துகள்.
- தீபாவளி நன்னாள் உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கட்டும்.
- அழகான நாட்கள் அமைய வாழ்த்துகள். இனிய தீபாவளி வாழ்த்துகள்.
- பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
- நன்மைகள் நடக்கட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்.
- வாழ்வில் ஆரோக்கியம், வளம், அமைதி எல்லாம் அமைய இறைவன் அருள் புரிவார். தீபாவளி வாழ்த்துகள்.
மேலும் வாசிக்க..
Diwali 2024: போடுங்க வெடிய! தீபாவளி பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது இவைதான்!