இந்தியா முழுவதும் உணவு வகைகளோடு சேர்த்து சாப்பிடும் பருப்பு வகைகள் மிக முக்கிய உணவாக இருக்கின்றன. குழம்பு வடிவத்தில் வெங்காயம், தக்காளி முதலானவற்றோடு சேர்த்து சமைக்கப்பட்டு, அரிசி, ரொட்டி முதலானவற்றோடு தொட்டுச் சாப்பிடப்படுகின்றன. பல்வேறு வகையிலான பருப்புகள். பருப்பு வகைகளில் அதிகளவில் புரதச் சத்து, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் முதலானவை நிரம்பி இருக்கின்றன. மேலும், பருப்பு வகைகள் உடல் வலிமைக்கும் பயன்படுகிறது. வட இந்தியாவில் ரொட்டியுடனும், தென்னிந்தியாவில் தோசை, இட்லி ஆகிய உணவு வகைகளுடனும் இந்தப் பருப்பு வகைகள் உண்ணப்படுகின்றன. 


உடல் எடைக் குறைப்புக்காக பயன்படும் 4 வகையிலான பருப்புகளை இங்கு காண்போம். 



பச்சைக் கடலைப் பருப்பு:


பச்சைக் கடலைப் பருப்பு வகையில் `பி காம்ப்ளெக்ஸ்’ வைட்டமின்கள் இருக்கின்றன. இதனால் உடல் சுறுசுறுப்பாகவும், அதிக ஆற்றல் மிக்கதாகவும் இருக்கும். நன்கு சமைக்கப்பட்ட பச்சைக் கடலைப் பருப்பு வகையை தினமும் ஒரு கப் என்ற அளவில் உண்பது, அந்த நாளுக்குத் தேவையான 33 சதவிகிதப் புரதச் சத்துகளை வழங்குகிறது. மேலும், இதில் உள்ள ஊட்டச்சத்துகள் இதயத்திற்கு நலம் சேர்ப்பவை. இதனால் இதயம் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் செயல்படும். 


கறுப்பு உளுத்தம் பருப்பு: 


நன்கு சமைக்கப்பட்ட கறுப்பு உளுத்தம் பருப்பு ஒரு கப் உண்பது நாள் ஒன்றுக்கு சுமார் 41.6 சதவிகிதப் புரதச் சத்துகளை அளிக்கிறது. கறுப்பு உளுத்தம் பருப்பு வகையில் கார்போஹைட்ரேட் சத்து குறைவாகவும், புரதச் சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக இருக்கிறது. மேலும் குறைந்த அளவிலான எண்ணெய் பயன்படுத்தி, கறுப்பு உளுத்தம் பருப்பு வகையால் செய்யப்படும் மெதுவடை நமது வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைக்கும். மேலும், அதிகம் உணவு உட்கொள்வதை இது தடுப்பதோடு, எடைக் குறைப்புக்கு உதவுகிறது. 



மசூர் பருப்பு:


மசூர் பருப்பு வகையில் சுமார் 26 சதவிகிதப் புரதச் சத்து இருப்பதோடு, இது சமைக்கப்படும் போது, மெல்லிய தங்க நிறமாக மாறுகிறது. நன்கு சமைக்கப்பட்ட மசூர் பருப்பு ஒரு கப்பில் சுமார் 19 கிராம் புரதச் சத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், வளர்ந்த நபர்களுக்கு ஒரு நாளைக்குத் தேவையான 31 சதவிகிதப் புரத சத்து இந்தப் பருப்பு வகையில் கிடைக்கிறது. 


பாசி பருப்பு:


நன்கு சமைக்கப்பட்ட பாசி பருப்பு ஒரு கப்பில் சுமார் 14 கிராம் புரதச் சத்து, 15.4 கிராம் நார் சத்து ஆகியவை இருக்கின்றன. புரதச் சத்து, நார் சத்து ஆகியவை நம் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.