2022 புத்தாண்டை படுகொண்டாட்டமாக செலிபிரேட் செய்ய நம்மூர் தயாராகி வருகிறது. கெடுபிடிகளுக்கு இடையே குடும்பம் நண்பர்களுடன் பல்வேறு ஊர்களுக்கு சிட்டாகப் பறந்து வருகின்றனர். இதற்கிடையே புத்தாண்டு கொண்டாடுவதற்கு என்றே புதுச் சட்டைகளை வாங்க கடைகளில் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது.  பலவகை டிசைனர்கள் புத்தாண்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஜீன்சுக்கான மவுசு என்றுமே தனிதான். அந்த வகையில் எந்த மாதிரி ஜீன்ஸ் ஷர்ட் அணியலாம், அஜீத், ரஜினி, விஜய், சூர்யா, கமல் என யார் பாணியில் உடை உடுத்துவது கலாட்டாவாக இருக்கும்.. சில ஐடியாக்கள்


சிம்பிளாக இருந்தாலும் வெறும் டெனிம் சட்டையில் ஸ்மார்ட்டாக இருக்கும் விக்ரம் பாணியில் அணியிலாம். ஜீன்ஸ் சட்டைகளுக்கு முழுக்கால் பேண்ட்தான் அணிய வேண்டும் என இல்லை, குவாலிட்டியான மெட்டீரியல்களில் வெள்ளை, ப்ரவுன் என சாலிட் நிறங்களில் ஃபார்மல் ஷார்ட்கள் சந்தையில் கிடைக்கின்றன. பார்க்க ஃபார்மலாகவும் இருக்கும் கேஷுவலாகவும் இருக்கும். 




ஜீன்ஸ் ஷர்ட் எல்லாம் யாருங்க கசகசனு போடுவாங்க? கொஞ்சம் எதாச்சும் யூத்ஃபுல்லா சொல்ல முடியுமா? எனக் கேட்பவர்களுக்கு சிம்பிள் ரவுண்ட் நெக் டிஷர்ட்டின் மேல் ஒரு மெல்லிய ஜீன்ஸ் ஓவர் கோர்ட் பரிந்துரைக்கலாம். கூடவே கூலர்ஸ்! நீங்கதான் நியூ இயர் ஸ்டார்.


இதிலேயே டைட் ஃபிட், ஸ்லிம் ஃபிட் என பல்வேறு ரகங்கள் உள்ளது. ஒவ்வொருவரது உடல்வாகைப் பொறுத்து ஷர்ட்டின் பிட்னஸைத் தேர்ந்தெடுக்கலாம்.ஒல்லியாக இருப்பவர்களுக்கு டார்க் ப்ளூ நிற ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும் அதுவே சற்று பூசியது போன்ற உடல் இருப்பவர்களுக்கு டார்க் மற்றும் லைட் நீலம் இரண்டுமே பொருத்தமாக இருக்கும்.பருமனான உடல்வாகு உடையவர்களுக்கு லைட் நிறம் பொருத்தமாக இருக்கும்.  


முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையில் டிசம்பர் 31 ம் தேதி இரவு மற்றும் ஆங்கில புத்தாண்டு அன்று கொண்டாட தமிழ்நாடு காவல்துறை தடை விதித்துள்ளது. கடற்கரையில்  புத்தாண்டை கொண்டாட அனுமதி இல்லாததால் அவரவர் வீட்டிலையே கொண்டாட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இதுகுறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவிக்கையில், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக்கூடாது எனவும், மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார். மேலும், புத்தாண்டில் தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாமல் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எவரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து டிசம்பர் 31 ம் தேதி முதல் அடுத்த நாள் அதிகாலை வரை பொதுமக்கள் ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அன்று இரவு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தால் காவல்துறையினர் மூலம் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்


Also Read | Today Headlines: பிரதமருக்கு முதல்வர் கடிதம்... மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அங்கீகாரம்... ஜார்க்கண்ட் பெட்ரோல்... இன்னும் பல!