Jackfruit Chips: சுவையான பலாக்காய் சிப்ஸ்.. மொரு மொரு சுவையில் செய்வது எப்படி..?

மொரு மொரு பலாக்காய் சிப்ஸ் எப்படி ஈசியா தயாரிக்குறதுனு பார்க்கலாம் வாங்க.

Continues below advertisement

ஒவ்வொரு சிப்ஸ்சும் ஒவ்வொரு சுவையை கொண்டிருக்கும். பொதுவாக சிப்ஸ் என்றால் பெரும்பாலானோருக்கு பிடிக்கும். அதன் சுவை தான் அதற்கு காரணம். குறிப்பாக குழந்தைகளுக்கு மற்ற தின்பண்டங்களை காட்டிலும் சிப்ஸ் மிகவும் பிடித்தமானது. அதன் கரக் முரக் சத்தத்துடன் கூடிய க்ரிஸ்பினஸ் கூட இதற்கு முக்கிய காரணம். ஆனால் நாம் கடைகளில் எண்ணெயில் பொரித்த பொருட்களை வாங்க தயங்குவதற்கு முக்கிய காரணம் பொரிக்க பயன்படுத்தும் எண்ணெயின் தரம் குறித்த பயத்தினால் தான். 

Continues below advertisement

அதனால் தான் சில பெற்றோர் சிப்ஸ் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். பலாக்காய் சிப்ஸ் சுவையாகவும் ஈசியாகவும் எப்படி செய்யுறதுனு தான் இப்போ நாம பார்க்க போறோம். 

.தேவையான பொருட்கள் 

பலாச்சுளை பழுக்காதவை - 10
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய்த் தூள் -1/2 ஸ்பூன் 
எண்ணெய்- தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

 செய்முறை

முதலில் பலாக்காயில் இருந்து பலாச்சுளைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பலாச்சுளையில் இருக்கும் கொட்டையை அகற்றி விட்டு, சுளையை ஒரே மாதிரியான அளவில் நீளவாக்கில் மெல்லிதாக  கொள்ள வெட்டிக்கொள்ள வேண்டும்.

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அதில் சிறிது தண்ணீர் தெளித்துக் கலந்து கொள்ள வேண்டும்.  பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.எண்ணெய் கொதித்த பிறகு, தீயை சிம்மில் வைத்து அரிந்து வைத்துள பலாக்காய் துண்டுகளை, எண்ணெயில் சிறிது சிறிதாக உதிர்த்து போட வேண்டும். 

நன்கு பொரிந்த பிறகு, சிறிது உப்புக் கலந்த நீரை, சிறிது எண்ணெய் உடன் சேர்த்து கடாயில் பொரிக்கும் எண்ணெய்யில் சேர்க்க வேண்டும். எண்ணெய்யின் சத்தம் அடங்கிய பின் பொரித்த பலாச்சுளைகளை கடாயில் இருந்து கரண்டியில் நன்கு எண்ணெயை வடித்து விட்டு எடுக்க வேண்டும். பின் சிப்ஸ்களை பாத்திரத்தில் மாற்றி சிறிது மிளகாய்த் தூள் தூவி எடுத்து பரிமாறினால் சுவையான பலாக்காய் சிப்ஸ் தயார்.
 
பலாக்காயில் உள்ள சத்துகள் 
 
பலாக்காயில் இரும்பு, கால்சியம், புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. பலாக்காயிலிருக்கும் "ஐக்சுலின்" எனும் சத்து நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. மேலும் லிக்கினேஸ், சபோனின், ஐசொபிளாவின் போன்ற தாவர சத்துக்களும் உள்ளதால் இது மிகச் சிறந்த ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக இருக்கிறது.
 
மேலும் படிக்க
Continues below advertisement
Sponsored Links by Taboola