பெரும்பாலானோருக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பஜ்ஜி, போண்டா, சமோசா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை தான் வழக்கமாக சாப்பிடும். ஆனால் ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் வகைகளை தினந்தோறும் சாப்பிட்டு போர் அடித்து விடும்.


அப்படியாக வித்தியாசமாக ஏதாவது ஸ்நாக்ஸ்சை சுவைக்க விரும்புவர். அப்படி வித்தியாசமாக புதியதாக ஏதேனும் முயற்சிக்க விரும்புபவர்களுக்கு வெண்டைக்காய் சிப்ஸ் சரியான சாய்சாக இருக்கும். இப்போ சுவையான மொறு மொறு வெண்டைக்காய் சிப்ஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. 


தேவையான பொருட்கள் 


வெண்டைக்காய் - 10-15, குடைமிளகாய் - 1/2 கப், ( நீள வாக்கில் நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,  கரம் மசாலா - 1 டீஸ்பூன், மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன், சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்,  அரிசி மாவு - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு ,உப்பு - தேவையான அளவு


செய்முறை

முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு , சோள மாவு, மல்லித் தூள்மிளகாய் தூள் சேர்த்து, குடைமிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு மிக்ஸ் செய்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.


பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலாவில் மிக்ஸ் செய்து ஊற வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து இறக்கினால், வெண்டைக்காய் சிப்ஸ் தயார். 


வெண்டைக்காயின் நன்மைகள் 

மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் மூளை ஆக்டிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் கல்வி பயிலும் குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறக்க முடியும்.


வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.