டிசம்பர் மாதம் ’Constipation Awareness Month’ -ஆக கடைப்பிடிக்கப்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கம் அளிப்பதும் இதன் நோக்கமாகும்.
பல்வேறு காரணங்களால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம்,.. அதற்கேற்றவாறு சிலவற்றை பின்பற்றினால் குணமாக கூடியதுதான். செரிமான மண்டலம் சீராக செயல்படுவது மிகவும் அவசியம். அதன் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவுப் பழக்கங்களில் சிலவற்றை பின்பற்றினால் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் சிலவற்றை காணலாம்.
நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள்:
உணவில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதை உறுதி செய்யவும். Soluble fibre ஓட்ஸ், ஆப்பிள்,பீன்ஸ், Insoluble fibre உணவுகளான முழு தானியங்கள், காய்கறிகள் ஆகியவையும் செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவும். மூன்று வேளை உணவிலும் நார்ச்சத்து நிறைந்திருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். உணவு இடைவேளையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதாக இருந்தால் அதில் நார்ச்சத்து நிறைந்தவற்றை சேர்க்கலாம்.
தண்ணீர்:
ஒரு நாளை உடலுக்குத் தேவையான தண்ணீரைக் குடிப்பது மிகவும் அவசியமானது. செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. இது பெருங்குடலின் சீரான உடல் இயக்கத்திற்கும் உதவும். தினமும் 8 டம்பளர் தண்ணீர் குடிப்பது அவசியமானது.
ப்ரோபயாடிக்ஸ்:
குடல் ஆரோக்கியத்தை மேம்பட தினமும் உணவில் ப்ரோபயாடிக் உணவுகள் இருக்க வேண்டும். தயிர், மோர், யோகர்ட் ஆகிய நல்ல பாக்ட்ரீயாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உணவுகள் செரிமானத்திற்கு உதவும். இது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படமால் இருக்க உதவும்.
துரித உணவுகள் வேண்டமே:
துரித உணவுகள், பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை அதிகம் நிறைந்த குளிர்பானங்கள், நார்ச்சத்து குறைந்த உணவுகள், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிகம் ப்ராசஸ் செய்யப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும்.
சரிவிகித உணவு:
தினமும் நேரத்திற்கு சரிவிகித உணவு சாப்பிடுவது நல்லது. சாப்பிடாமல் இருப்பது, அதிகமாக சாப்பிடுவது, இரவு நேரத்தில் ஜங்க் உணவுகள் சாப்பிடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடுவது செரிமான மண்டலம் சீராக செயல்படுவதை பாதிக்கும். நீங்கள் சாப்பிடும் உணவு செரிமான மண்டலத்திற்கு உதவும் வகையில் இருக்க வேண்டும்.
நன்றாக மென்று சாப்பிடவும்:
அவசர அவசரமாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது அல்ல. உணவு செரிமானம் வாயில் இருந்து தொடங்குவதாக மருத்துவர்கள் சொல்வார்கள். உணவை நன்றாக மென்று சாப்பிடுவது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
ஆல்கஹால் / கஃபைன் அளவோடு இருக்கட்டும்:
ஆல்கஹால் உடல்நலத்திற்கு கேடாது. அது நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். தினமும் அதிகமாக காஃபி, டீ குடுப்பதை தவிர்ப்பது நல்லது. இவை செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள்:
உடலுக்கு கொழுப்புச்சத்து தேவையில்லை என்பதில் துளியும் உண்மையில்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். உடலுக்குத் தேவையான ஆரோக்கியமிக்க கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
இன்றைய சூழலில் பெரும்பாலானவர்கள் ‘டயட்’ என்பது குறித்து பேசுவதை காணலாம். பிடித்த உணவுகளை தவிர்த்து கஷ்டப்பட்டு சிலவற்றை சாப்பிட முயற்சி செய்வதுண்டு. இந்த முறையில் அப்படியில்லை. அதாவது, நெய், வெண்ணெய் போன்ற உணவுகளில் அதிக கொழுப்பு இருக்கிறது என்று சிலர் டயட்டில் அதை தவிர்த்துவிடுவர்; அது மிகவும் பிடித்ததாகவே இருந்தாலும்.. இருந்தாலும் அளவோடு வெண்ணேய் உணவில் சேர்த்துகொள்வது உடலுக்கு நல்லது மட்டுமே. கவலையோடு டயட் முறையை பின்பற்ற வேண்டும் என்பதில்லை..