கண்ணனுக்கு தெரியாத ஒரு வைரஸ் உலகத்தையே புரட்டி போட்டு கொண்டு இருக்கிறது. 2020 ஆண்டில் தொடங்கி, இன்று வரை ஒவ்வொரு அலையாக வந்து கொண்டு இருக்கிறது. முதல் அலையில் ஒரு குறிப்பட்ட அளவு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாம் அலை, மிக பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. இதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கையில், அடுத்த மூன்றாம் அலை வர ஆயத்த மாகி கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து அனைவரும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம், இந்த கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முடியும் என கூறுகின்றனர். முகக் கவசம்அணிதல், கைகளை அவ்வப்போது கழுவுதல், மற்றும் தனி மனித இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை செய்வதன் மூலம், இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும்.
இந்த நிலையில் முககவசம் அணிவது இன்று பேஷனாக மாறி விட்டது. உடுத்தும், உடைக்கு மேட்சாக முகக் கவசம் அணிவது என ட்ரெண்ட் இருந்தாலும், முகக் கவசம் சில பிரச்சனைகளை தருகிறது. துவைக்காமல் ஒரே முககவசத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் தொற்று பரவும்.
மாஸ்க்னே என்னு தோல் ஒவ்வாமை பிரச்சனை வரும்.எரிச்சல் மற்றும் தோல் நிறம் மாறி ஒரு வித முகப்பரு வரும். மீண்டும் மீண்டும் ஒரே மாஸ்க் பயன்படுத்துவதால் இது போன்ற பிரச்சனைகள் வரும். ஒரு முறை பயன்படுத்திய மாஸ்க் மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
மேலும் துவைக்காமல், சுத்தம் இல்லாத துணி மாஸ்க் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது மியூகோர்மைகோசிஸ் (கருப்பு பூஞ்சை) நோய்த்தொற்று வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மிகவும் சென்சிட்டிவான சருமம் இருப்பவர்கள், பருத்தியாலான மாஸ்க் பயன்படுத்தலாம். அதுவும், ஒரு முறை பயன்படுத்திய பிறகு துவைத்து நன்றாக காய வைத்து அடுத்த முறை பயன்படுத்த வேண்டும்.
மருத்துவர்கள் பயன்படுத்தும், சர்ஜிக்கல் மாஸ்க் பயன்படுத்துவது, சிறந்தது. ஒரு நாள் பயன்படுத்தி விட்டு தூக்கி எரிந்து விடுவது நல்லது.
சிலருக்கு ஒரே மாஸ்க் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் தோலில் அரிப்பு ஏற்படும். தோல் ஒவ்வாமை பிரச்சனைகள் வரும். மிகவும் இறுக்கமாகவும், மேலும் சருமத்தில் இருக்கும் துவாரங்களில் வியர்வை முழுமையாக வெளியேறாமல் இருப்பதால் இது போன்ற அரிப்புகள் வரும்.
மாஸ்க் அணிவது நோய் தொற்று வராமல் இருக்கத் தான். ஒரு முறை மாஸ்க் பயன்படுத்தி விட்டு தூக்கி எரிந்து விடுங்கள். துணி மாஸ்க் பயன்படுத்துபவராக இருந்தால் ஒரு முறை பயன்படுத்தி விட்டு துவைத்து மீண்டும் பயன்படுத்துங்கள்
சிலர் வாய்க்கு மாஸ்க் பயன்படுத்துகின்றனர். அல்லது, தாடை பகுதியில் தான் மாஸ்க் மாட்டி இருக்கின்றனர். இதுவும் தவறானது.அதனால் மாஸ்க் அணியும் போது மூக்கு, வாய் அனைத்தும் முழுமையாக மூடி இருப்பதாய் உறுதிபடுத்தி கொள்ளுங்கள்..