கிறிஸ்துமஸ்  மற்றும் புத்தாண்டு என்றாலே வண்ணமயமான அலங்காரங்கள் தொடங்கி சுவையான கேக்குகள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அதிலும் விதவிதமான கேக்குகளைச் செய்ய வேண்டும் நினைப்பவர்கள் அனைவரும் நிச்சயம் ஸ்ட்ராபெரி, கேரட் போன்ற கேக் வகைகளை செய்ய முயற்சிக்கலாம். நிச்சயம் இது மிகுந்த சுவையுடன் மட்டுமில்லாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ணும்போது உங்களுடைய கேக்தான் சிறப்பானதாக இருக்கும். வாங்க.. இந்த கேக் எப்படி செய்யலாம் இங்க பார்ப்போம்.



ஸ்ட்ராபெரி ஸ்பாஞ்ச் கேக் செய்யும் முறை:


 தேவையான பொருட்கள்:


வெண்ணெய் – 40 கிராம்


முட்டை – 2


சர்க்கரை – 45 கிராம்


பாதாம் தூள் – 35 கிராம்


மாவு – 15 கிராம்


ஒரு சிட்டி உப்பு  மற்றும் பேக்கிங் சோடா எடுத்துக்கொள்ள வேண்டும்.


ஸ்ட்ராபெரி – ¼ தேக்கரண்டி


சிவப்பு நிறம் கொண்ட ராஸ்பெர்ரி  - ¼ தேக்கரண்டி


செய்முறை:


மைக்ரோவோவில் வைக்கும் கண்ணாடி பாத்திரத்தை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 4 கிராம் அளவு வெண்ணெய் சேர்த்து 1 நிமிடம் 375W ல் மைக்ரோவேவில் வைக்க வேண்டும். பின்னர் ஒரு  பாத்திரத்தில் 2 முட்டை மற்றும் 45 கிராம் சர்க்கரைச் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதனுடன் 15 கிராம் மாவு, ஒரு சிட்டிகை சமையல் சோடா மற்றும் உப்பு சேர்த்துக்கொள்வதோடு, அதில் 40 கிராம் உருகிய வெண்ணெயையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஸ்டாபெர்ரி கேக் என்பதால் ¼ டீஸ்பூன் ஸ்ட்ராபெரி எசன்ஸ் மற்றும் ராஸ்பெர்ரி சேர்த்து கலவையை நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். இறுதியில் நமக்கு பிடித்தமான கேக் அச்சில் கேக் கலவையை ஊற்றி சுமார் 4 நிமிடங்கள் 375W ல் மைக்ரோவேவ் செய்துக்கொள்ள வேண்டும். தற்போது சூடான மற்றும் சுவையான ஸ்ட்ராபெர்ரி கேக் ரெடியாகிவிட்டது.


கேரட் கேக்..


தேவையான பொருள்கள் :


கேரட் – 50 கிராம்


எண்ணெய் – 40 மில்லி


சர்க்கரை – 30 கிராம்


முட்டை – 2


வால்நட் – 25 கிராம்


மாவு – 60 கிராம்


இலவங்கப்பட்டைத்தூள் – 1 டீஸ்பூன்


பேக்கிங் பவுடர் - ¼ தேக்கரண்டி


சோடா உப்பு - ¼ தேக்கரண்டி


வெண்ணிலா எசன்ஸ்  - ¼ தேக்கரண்டி





செய்முறை:


மைக்ரோவில் வைக்கக்கூடிய கண்ணாடி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு முதலில் 5 கிராம் கேரட்டைச்சேர்த்து 375W ல் ஒரு நிமிடம் மைக்ரோவேவ் செய்ய வேண்டும். பின்னர் 2 முட்டைகள், 30 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். அதனுள் 40 மில்லி எண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இதனையடுத்து பாத்திரத்தில் 60 கிராம் மாவு, , ¼ தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ¼ தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள், 25 கிராம் வால்நட் சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் கேரட் சேர்த்து ¼ தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். இறுதியில் அதனை கேக் அச்சில் ஊற்றி சுமார் 3 நிமிடங்கள் 300W மைக்ரோவோவில் வைத்து எடுத்தால் சுவையாக கேரட் கேக் தயாராகிவிட்டது.


கிறிஸ்துமஸ் பழ கேக் (Fruit Cake)


தேவையான பொருட்கள்:


வெளிர் பழுப்பு சர்க்கரை - 200 கிராம்


தண்ணீர் - 240 மிலி/கிராம்


வெண்ணெய்- 55 கிராம்


அரைத்த இலவங்கப்பட்டை- 1 தேக்கரண்டி


அரைத்த கிராம்பு - 1/2 தேக்கரண்டி


அரைத்த இஞ்சி - 1 தேக்கரண்டி


உப்பு - 1/2 தேக்கரண்டி


உலர்ந்த திராட்சை, உலர்ந்த நெல்லி – 300கிராம்


முட்டை – 2


மாவு – 1 ½ கப்


பேக்கிங் சோடா -  1 தேக்கரண்டி


வெண்ணிலா எசெனஸ் – 1 தேக்கரண்டி


ஆரஞ்சு மிட்டாய் அல்லது எலுமிச்சை தோல் நறுக்கியது: 1 கப் (150 கிராம்)


ஒரு ரொட்டி


செய்முறை:


ஒரு பெரிய வாணலை எடுத்து,  மிதமான வெப்பத்தில், சர்க்கரை, தண்ணீர், வெண்ணெய், மசாலா மற்றும் உலர்ந்தப் பழங்கள் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மெதுவாக கொதிக்க வைக்க வேண்டும். இதற்கிடையில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வெண்ணெய்யை உருக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் கடாயின் அடிப்பகுதியில் வைக்கும் பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு லேசாக வெண்ணெய் தடவி எடுத்து வைக்க வேண்டும்.



ஏற்கனவே நாம் செய்து வைத்திருந்த கலவையின் சூடு குறைந்ததும் முட்டை, மாவு, பேக்கிங் சோடா மற்றும் வெண்ணிலா எசென்ஸை சேர்த்துக்கிளறவும். பின்னர் இதனை கடாயில் ஊற்றி சுமார் 55- 65 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். தற்போது அனைத்து பழங்கள் நிறைந்த சுவையாக கிறிஸ்துமஸ் பழ கேக் ரெடியாகிவிட்டது.