உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பொதுவாக பண்டிகை வந்தாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது வண்ண வண்ண விளக்குகளும், கிறிஸ்துமஸ் மரம், இனிப்புகள், குடில், பரிசுப்பொருள்களும்தான். வீதிகளிலும், அனைத்து வீடுகளிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்புகள் கண்களைக்கவரும். மேலும் கிறிஸ்துமஸ் நாளில் குடும்பத்தினர் நண்பர்களை வீடுகளுக்கு அழைத்து மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.
இயேசுவின் பிறந்தநாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சி, அமைதி, கொண்டாட்டம் என கிறிஸ்துமஸ் நாள் எல்லா நன்மைகளையும் அனைவருக்கும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. சான்டா க்ளாஸ் கிறிஸ்துமஸ் தினத்தில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து பரிசு கொடுப்பார் என்பது சுவாரஸ்யமான நம்பப்படும் கதை.
அன்பிற்குரியவர்களுக்கு வாழ்த்து சொல்ல ...
- கிறிஸ்துமஸ் நாள் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
- இனி வாழ்வு முழுவதும் அன்பு, அமைதி நிறைந்தவையாக இருக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
- இந்த கிறிஸ்துமஸ் தினம் உங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை வழங்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
- இந்த இனிய நாளில் உங்கள் நன்மைகள் நிகழட்டும். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
- கிறிஸ்துமஸ் நாளில் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருடன் இனிமையான நினைவுகளை உருவாக்கிட வாழ்த்துகள்.இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
- கிறிஸ்துமஸ் தினத்தின் சிறப்பு, அன்றைய நாள் நீங்கள் ஆனந்தமாகவும் உங்கள் அன்பிற்குரியர்களுடன் கொண்டாடி மகிழ்வதையும் அளிக்கும். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
- கிறிஸ்துமஸ், புதிய ஆண்டு உங்களுக்கு ஆரோக்கியத்தையும் அமைதியையும் வழங்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
- கிறிஸ்துமஸ் நாளில் உங்களின் அன்பிற்குரியர்வகளிடன் அன்பை வெளிப்படுத்துங்கள். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
- சான்டா க்ளாஸ் உங்களின் கனவுகள் நினைவாகிட பரிசுகள் வழங்கிடுவார். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
- கிறிஸ்துமஸ் நாள் உங்களுக்கு சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
- குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ் வாழ்த்துகள். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
- இனிமையான, வளமான புதிய நாட்கள் தொடர வாழ்த்துகள். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
- உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
- வாழ்வில் அமைதியும் அன்பும் நிறைந்திருக்க வாழ்த்துகள். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
- இனிய நாளாய் அமையட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
- மகிழ்ச்சியாக இருங்க..இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!