தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன.
சென்னையில் நாளை 24-12-2024 எழும்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தும் செய்யப்பட உள்ளது.
எந்தெந்த பகுதியில் நாளை மின்சாரம் இருக்காது ?
எழும்பூர் துணை மின் நிலையத்தில் மின்னிருத்தம் செய்யப்படும் பகுதிகள்.
சைடன் ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பீ.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெருவின் ஒரு பகுதி, ஏ.பி - சாலை, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு,அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு. ஆண்டியப்பன் தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு. பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பாரக்ஸ் சாலை.
வி.வி கோவில் தெரு, குற வன் குளம், சுப்பாகா நாயுடு தெரு, தேரு வெளிப் புற அரங்கம், நேரு உள்விளையாட்டு அரங்கம், ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விர்ச்சூர் முத்தையா தெரு, டேலி தெரு, மாணிக்கம் தெரு. ரெங்கையா தெருவின் ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலையின் ஒரு பகுதி, ராகவா தெரு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மின்சாரம் வருவது எப்போது ?
நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.