உலகில் பல கோடிக்கணக்கான பேர் இதய நோய் பாதிப்பால் இறக்கிறார்கள். அதுவும் உடலில் இருக்கும் கெட்டக் கொழுப்பு இதய நோய்க்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. கொழுப்பைக் குறைத்து இதயத்தை வலுவாக்க உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றுவதே போதுமானது.






என்னென்ன உணவுகளைச் சேர்க்கலாம்?


பீன்ஸ், காராமணி, பட்டாணி போன்ற பச்சை தானிய வகைகளை உணவில் சேர்க்கலாம். இதில் அதிக நார்ச்சத்து உள்ளது.மேலும் தாது மற்றும் புரதமும் அதிகமாக உள்ளது. கறி உணவுக்கு பதிலாக இவற்றை உணவில் சேர்ப்பது கொழுப்பு சேர்வதைக் குறைக்கும். ஒரு நாளைக்கு 100 கிராம் பீன்ஸ் அல்லது காராமணி எடுத்துக் கொள்வது சுமார் 6.6 மிலி கிராம் அளவிலான கொழுப்பைக் கட்டுப்படுத்தும். 


அவகாடோ அல்லது பட்டர் ஃப்ரூட்


இது அதிக சத்து உள்ள பழம.ஒரே சமயத்தில் கெட்ட கொழுப்பைக் கரைத்து உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.அதிக உடல் எடை உள்ள ஒருவர் தினமும் ஒரு அவகாடோ சாப்பிடுவது உடல் எடையைக் கணிசமாகக் குறைக்கும். 


பாதாம் வால்நட் போன்ற கொட்டைகள்


வால்நட்டில் உள்ள ஒமேகா 3 ஃபாட்டி ஆசிட் மற்றும் பாதாமில் உள்ள ஆர்ஜினைன் அமினோ அமிலம் ஆகியன ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகின்றன.அதில் உள்ள கால்சியம் மெக்னிசியம் போன்றவையும் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும். தினமும் இந்த கொட்டை வகைகளை உட்கொண்டுவருவது 25 சதவிகிதம் வரை இதய நோயைத் தடுக்கும். 


காளா மற்றும் கானாங்கெளுத்தி மீன்


இந்த இரண்டு மீன் வகையிலும் ஒமேகா ஃபாட்டி ஆசிட் அதிகம் இருப்பதால் அவை இரத்த அழுத்தத்தைச் சீராக்கும். மேலும் மீன்களை வறுத்து உண்ணாமல் வேகவைத்து அல்லது கஞ்சியுடன் கொதிக்கவிட்டு உண்ணுவதே உடலுக்கு ஆரோக்கியம் தரும்.


ஓட்ஸ் பார்லி போன்ற முழு தானியங்கள்


இவற்றில் இருக்கு பீட்டா க்ளூக்கன் எனப்படும் ஃபைபர்கள் கொழுப்பை 5 சதவிகிதம் வரைக் குறைக்க உதவும்.இதுபோலவே பழங்களிலும் பெர்ரிக்களிலும் இருக்கும் ஒருவகை நார்ச்சத்தும் கொழுப்பைக் குறைக்க உதவும்.