மழை காலம் வந்தாலே கொண்டாட்டம் ஒரு  பக்கம் இருந்தாலும், மறுபக்கம் தொற்று நோய்கள் பற்றிய கவலையும் சேர்ந்து  கொள்ளும். சளி,  இருமல்,காய்ச்சல், டெங்கு போன்ற பிரச்சனைகள் வரும். பெரியவர்களுக்கு இந்த  பிரச்சனை வந்தாலே சமாளிப்பதற்குள் போதும் போதும்என்றாகி விடும். குழந்தைகளுக்கு வந்தால், அனைவரும் சேர்ந்து பிரச்சனையை சமாளிக்க வேண்டியதாக இருக்கும்.




வருமுன் காப்பதே சிறந்தது. இவற்றை வராமல் தடுக்க சில எளிமையான ஆலோசனைகள் இதோ



  • வீட்டை நன்றாக சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.வேட்டை சுற்றி எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இது கொசு, மற்றும்  பூச்சி,வண்டுகள் வளர்வதற்கு ஏற்றதாக அமைந்து விடும்.

  • குழந்தைகளுக்கு மின்சார உபகரணங்கள் தொடாத வாறு பார்த்து கொள்ள வேண்டும். மின்சார இணைப்பு முறையாக இல்லை என்றால் இதுவே ஆபத்தை  ஏற்படுத்தும்.





  • குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை அளிக்க வேண்டும். மழை காலத்தில் சூடாக சமைத்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். காய்கள் மற்றும் பழங்களை சுத்தமாக கழுவி பின்னர் பயன்படுத்த வேண்டும்.

  • கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருப்பதற்கு ஏதுவாக கொசுவிரட்டி, கொசுவலை பயன்படுத்துங்கள். கொசுக்கள் கடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.





  • தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் ஆரோக்கியமான சத்தான உணவை எடுத்து கொள்ள வேண்டும். அது, தாய்ப்பால் சுரப்பதற்கு ஏதுவாக இருக்கும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் பார்த்து கொள்ளலாம். தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான ஆண்டிபாடிகள் நிறைந்து இருக்கிறது.

  • குழந்தைகளுக்கு டையப்பர் அவ்வப்போது மாற்றி விடுங்கள். இது ஈரத்தினால் வரும், அரிப்பு, எரிச்சல் வராமல் இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு  டயப்பர்  மாற்றுவது,குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

  • குழந்தைகளுக்கு குளிரால் இருப்பதற்கு ஏதுவாக கம்பளி ஆடைகள், காட்டன் ஆடைகள் பயன்படுத்த வேண்டும். மிகவும் இறுக்கமாகவும், மிகவும் தளர்வாகவும் இருக்க கூடாது.





  • முடிந்த வரை சுடு தண்ணீர் குடியுங்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மழை காலத்தில் குளிரால் வரும் சளி , இருமல் வராமல் பார்த்து கொள்ளும்.

  • உணவுகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தும், துளசி, இஞ்சி, மஞ்சள் கலந்த பால், ஓமவல்லி, போன்றவற்றை கொடுக்கலாம்.





  • மழையில் நனைவது, விளையாடுவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். நீண்ட நேரம் ஈரத்துடன் இருந்தாலும், காய்ச்சல் வரும். அதனால் ஈரத்தில் விளையாடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.


இது போன்ற விஷயங்கள் பின்பற்றுவதன் மூலம், மழை காலத்திலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.