வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்...? இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

வேலைக்கு போகும் ஒவ்வொரு பெண்ணும் தங்களது மனநலம் மற்றும் உடல்நலத்தில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். தனக்கான நேரத்தை ஒதுக்கி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

Continues below advertisement

வேலைக்கு போகும் ஒவ்வொரு பெண்ணும் தங்களது மனநலம் மற்றும் உடல்நலத்தில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். தனக்கான நேரத்தை ஒதுக்கி ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலோனோர் இதை செய்ய தவறுவதால் பல்வேறு உடல்நல பிரச்சனையை எதிர் கொள்கின்றனர்.

Continues below advertisement

இன்றைய சூழலில் குடும்பத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வேளைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதில் பெண்கள் ஒவ்வொருவரும் தங்களது வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக வேலைகளை சேர்த்து செய்ய வேண்டியதாக இருக்கும். பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்காக நேரத்தை செலவிடுகின்றனர் என பார்ப்பதற்கு போல் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. அவர்கள் தங்கள் குடும்பத்திற்கும், தங்களை சுற்றி இருப்பவர்களுக்கு மட்டும் நேரத்தை செலவு செய்கின்றனர். அலுவலகத்தில் அவர்கள் சூப்பர் வுமன் ஆக இருந்தாலும், தனது உடல் ஆரோக்கியத்தில் பின்தங்கி தான் இருக்கின்றனர். ஒவ்வொரு பெண்ணும் தங்கள் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய சில டிப்ஸ் இங்கே.


உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள் - ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரத்தை ஒதுக்கி, அதில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். பிடித்த வேலைகள், பாடல் கேட்பது, தியான பயிற்சி செய்வது உடற் பயிற்சி செய்வது என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற விஷயங்களை செய்யலாம்.

ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளியுங்கள் - உங்களது உடல் நலத்தை கவனியுங்கள்.அசதியாக இருக்கும் போது , ஓய்வெடுங்கள். ஆரோக்கியான உணவை எடுத்து கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சூப்பர் வுமன் ஆக இருப்பதோடு சேர்த்து ஆரோக்கியமா வுமன் ஆகவும் இருப்பதும் முக்கியம்.


மன்னிப்பு கேட்பதை தவிர்த்திடுங்கள் - அலுவலக மேலாளராக இருக்கட்டும், குடும்ப உறுப்பினர்களாகட்டும், அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது இயலாத காரியம். இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாதீர்கள். அதற்காக மன்னிப்பு கேட்காதீர்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். உங்களால் முடிந்த விஷயங்களை செய்யுங்கள்.

உடல் நலம் மற்றும் மனநலம் பேணுவதற்காக - உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க உணவு, மற்றும் உடற்பயிற்சி செய்வது, மனநலம் பேணுவதற்காக உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்யும். தனக்கான மீ டைம்  வைத்து கொள்ளுங்கள். அந்த நேரத்தை உங்களுக்காக மட்டும் வைத்து கொள்ளுங்கள்.


மனஅழுத்தம் இல்லாமல் இருப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. தினம் நேரம் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்வதால் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். தொடர்ந்து மனஅழுத்தமாக இருந்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை தருகிறது. ஓரிரு நாள் இது போன்ற மனஅழுத்ததில் இருந்தால் பெரிய விஷயமாக தெரியாது. இது போன்று தொடர்ந்து இருந்தால் உடல்நலம், மனநலம் பாதிப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் தனக்கான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola