கொரோனாவினை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்கவும் தர்பூசணியுடன் துளசி மற்றும் கற்றாழை கொண்ட சாறு பயனுள்ளதாக அமையும்.


 கொரோனா தொற்றின் தாக்கம் மக்களை பல்வேறு இன்னல்களை ஆளாக்கியுள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முகக்கவசம், சானிடைசர் கொண்டு கைகளை கழுவுவது, பொது இடங்களில் சமூக இடைவெளியினைப் பின்பற்றுவது போன்ற முறைகளை நம் அன்றாட வாழ்க்கையில் பழக்கப்படுத்திக்கொண்டோம். ஆனால் இது மட்டும் நம்மை உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் என்று கூற முடியாது. குறிப்பாக இந்நேரத்தில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்தால் மட்டுமே கொரோனாவினை எதிர்த்துப்போரட முடியும். இதற்கு என்ன மருந்துகள் உட்கொள்ளலாம்? என்ன சாப்பிடலாம்? என்ற யோசனை பலருக்கும் வரலாம். ஆனால் வீட்டில் கிடைக்கும் எளிமையான உணவுப்பொருள்களை வைத்தே நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த முடியும்.



இதற்கு வைட்டமின் சி மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ளலாம். இந்நிலையில் நமக்கு மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய துளசி, கற்றாழை, தர்பூசணி கொண்டு நோய் எதிர்ப்புச்சக்தியினை அதிகரிக்கும் பானத்தினை எளிதாக செய்யலாம். மேலும் தர்பூசணியில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அதேபோன்று கற்றாழை மற்றும் துளசியில் நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளதால் இந்த 3 பொருட்களும் சேர்ந்து நம்முடைய நோய் எதிர்ப்புச்சக்தியினை அதிகப்படுத்தும். எனவே இந்நேரத்தில் இதனை தயாரிக்கும் முறை மற்றும் தேவையான பொருட்கள் என்ன எனத் தெரிந்துக்கொள்வோம்.


தேவையான பொருட்கள்:


பெரிதாக நறுக்கிய 5-6 தர்பூசணி.


5- 6 துளசி இழைகள்


2 - 3 தேக்கரண்டி கற்றாழை ஜெல்


1 டீஸ்பூன் கருப்பு உப்பு


1/2 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள்


1/4 கப் தண்ணீர்


எலுமிச்சை சாறு 1-2 தேக்கரண்டி


செய்முறை:


நறுக்கிய தர்பூசணி, துளசி இலைகள், கற்றாழை ஜெல், கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு, தண்ணீர் மற்றும் கருப்பு மிளகு தூள் அனைத்தையும் நன்கு கலக்க வேண்டும். இதனையடுத்து சுவைக்கு ஏற்றவாறு உப்பு மற்றும் மிளகு சேர்ந்துக்கொள்ளவும். பிறகு இந்த சாற்றினை வடிகட்டியில் வடிகட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் குளிர்ச்சியாக பருக வேண்டும் என்று நினைப்பவர்கள் இதில் ஐஸ் கலந்து சாப்பிடலாம். தேவைப்படாதோர் அப்படியே பருகிக்கொள்ளலாம்.





இதில் நாம் பயன்படுத்தியுள்ள அனைத்துப் பொருள்களும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. எனவே கொரோனா வைரஸ் தொற்று காலக்கட்டத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்புச்சக்தியையும் ஏற்படுத்தக்கூடிய இந்த சாறு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதனை மதிய வேளைகளில் பருகுவது மிகவும் நன்மை பயக்கும். இதேபோன்று வேறு பழங்களிலும் நாம் ஜூஸ் செய்து பருகலாம்.